ஐபிஎல் 2022 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி முடிகிறது. 4 பிளேஆஃப் உள்பட 70 லீக் போட்டிகள் 65 நாள்களில் நடைபெறுகிறது. இதற்காக வழக்கம்போல் 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏவில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும், குரூப் பியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தாண்டு மகாராஷ்டிராவில் உள்ள மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடக்கின்றன. முதல் ஆட்டம் மார்ச் 26ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதலுடன் தொடங்குகிறது. அதேபோல இறுதி ஆட்டம் மே 22ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதலுடன் முடிகிறது.
இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை டெல்லி கேபிடல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் பிஷ்ட் அறிமுகப்படுத்தினார். இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை மார்ச் 27ஆம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பிரபோர்ன் மைதானத்தில் தொடங்குகிறது.
இதையும் படிங்க: IN vs WI: சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் மகாராணிகள்