இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பராக 18 போட்டிகளில் விளையாடியுள்ள இயன் கோல்டு, 2007ஆம் ஆண்டுமுதல் கிரிக்கெட் போட்டியின் நடுவராக பணியாற்றத் தொடங்கினார். பில்லி பைடன், டேவிட் ஷெப்பர்டு போன்று தனக்கென ஒரு ஸ்டெய்லில் இவர் நடுவராக பணியாற்றினார். பெரும்பாலும் போட்டிகளுக்கு இடையே கிரிக்கெட் வீரர்களுடன் சிரித்துப் பழகி சூழ்நிலைகளை சரியாக கட்டுக்குள் வைத்திருப்பார்.
அதேபோல் சில போட்டிகளுக்கு தவறாக அவுட் கொடுத்து சில சர்ச்சைகளிலும் இவர் மாட்டியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக சச்சின் 99 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் கொடுத்தது, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா அவுட் ஆனபோது நோ-பால் கொடுத்தது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
இதிவரை நடுவராக 74 டெஸ்ட் போட்டிகளிலும், 135 ஒருநாள் போட்டிகளிலும், 37 டி20 போட்டிகளிலும் நடுவராக செயல்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஐசிசியின் பொது மேலாளர் ஜுயோஃப் அலர்டைஸ் கூறுகையில், கிரிக்கெட் நடுவராக ஐயன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரது திறமையால் பல சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் மரியாதையைப் பெற்றுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், வாழ்க்கை முழுவதும் கிரிக்கெட்டுடன்தான் பயணிப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்றார்.