ETV Bharat / sports

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரைக் காண 3 டி கிளாஸ் ஆர்டர் செய்துள்ளேன்- ராயுடுவின் நக்கல் ட்வீட் - விராட் கோலி

மும்பை: உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு வழங்காததற்காக இந்திய வீரர் ராயுடு இந்தியத் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்-யை கலாய்க்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

ராயுடு
author img

By

Published : Apr 17, 2019, 11:57 AM IST

விராட் கோலி தலைமையிலான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில், நான்காம் வரிசையில் பேட்டிங் செய்வதற்காக அம்பதி ராயுடுவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியத் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் அவரை அணியில் இருந்து நீக்கினார்.

அவருக்குப் பதிலாக, தமிழக வீரரும் ஆல்ரவுண்டருமான விஜய் சங்கர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில்,

2017-ல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிவடைந்தப் பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் நான்காவது வரிசையில் பேட்டிங் செய்ய ராயுடுவிற்கு பொதுமான வாய்ப்புகளை வழங்கினோம். அவர் பேட்டிங் மற்றும் பீல்டிங் மட்டுமே செய்யக்கூடியவர். ஆனால் விஜய் சங்கரிடம், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று அம்சங்கள் ( டைமென்ஷன்) உள்ளது.

இதனால், அவரை எப்படி வேண்டுமானாலும் இந்திய அணியில் பயன்படுத்த முடியும் என தெரிவித்திருந்தார்.

  • Just Ordered a new set of 3d glasses to watch the world cup 😉😋..

    — Ambati Rayudu (@RayuduAmbati) April 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், இது குறித்து அம்பதி ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை காண 3-டி கிளாஸை ஆர்டர் செய்துள்ளேன் என எம்.எஸ்.கே பிரசாதை கிண்டல் செய்யும் வகையில் பதிவுட்டுள்ளார். இவரது ட்வீட் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ராயுடுவிற்கு இடம் கிடைக்காதது, தனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்ததக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.