ETV Bharat / sports

ரிஷப் பந்தை விட ராயுடுதான் பாவம்- கம்பிர் கருத்து - ராயுடு

டெல்லி: உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடிக்காததது தனக்கு மிகவும் வருத்தமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்தை விட ராயுடுதான் பாவம்
author img

By

Published : Apr 17, 2019, 9:30 AM IST

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணிக் குழுவில் அம்பதி ராயுடுவிற்கு பிசிசிஐ வாய்ப்பு தரவில்லை. இதனால், பல்வேறு வீரர்களும் ராயுடுவின் நீக்கம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் கூறுகையில்,

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அம்பதி ராயடு நல்ல ஆடக்கூடியவர். அவரது பேட்டிங் ஆவரேஜ் 48ஆக உள்ளது. 33 வயதான அவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தனது இடத்தை நழுவிட்டார் என்றுதான் கூறவேண்டும். என்னைப் பொறுத்த வரையில் ரிஷப் பந்தைவிட ராயுடுதான் இந்திய அணியில் இடம்கிடைக்காமல் போனதற்காக மிகவும் மனவேதனையுடன் இருப்பார்.

ரிஷப் பந்திற்கு வயது உள்ளது. இப்போது இல்லை என்றாலும் விரைவில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார். ஆனால், ராயுடுவிற்கு அப்படி இல்லையே. இதனால், ரிஷப் பந்த் அணியில் தேர்வாகாததை விட அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படாததுதான் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நானும் அவரது மனநிலையை சந்தித்துள்ளேன். மற்ற வீரர்களைக் காட்டிலும் ராயுடு அணியில் சேர்க்கபடாததற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, ரஞ்சி டிராஃபி கிரிக்கெட் தொடரில் இருந்து அம்பதி ராயுடு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 55 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1,694 ரன்களை அடித்துள்ளார். அதில், மூன்று சதம், 10 அரைசதம் அடங்கும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.