2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மே.30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களை அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் தற்போதைய பிரதமரும், பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் உலகக்கோப்பையில் பங்கேற்கவுள்ள உத்தேச பாகிஸ்தான் அணி வீரர்களோடு நேரம் செலவிட்டுள்ளார்.
1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வென்று சாதனைப் படைத்தது. இந்த சந்திப்பின்போது தனது கிரிக்கெட் அனுபவங்களை இம்ரான் பகிர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் 17பேர் கொண்ட உத்தேச பாகிஸ்தான் அணி, பாகிஸ்தான் தேர்வு குழுத் தலைவர் இன்சமாம் உல் ஹக், பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.