12ஆவது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
- ஆப்கானிஸ்தான்,
- ஆஸ்திரேலியா,
- இங்கிலாந்து,
- இந்தியா,
- இலங்கை,
- நியூசிலாந்து,
- பாகிஸ்தான்,
- தென்னாப்பிரிக்கா,
- வங்கதேசம்,
- வெஸ்ட் இண்டீஸ்
உள்ளிட்ட 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்தத் தொடரில் விளையாடவிருக்கும் அனைத்து அணிகளின் வீரர்களின் பெயர் பட்டியலை ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது.
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நியிசிலாந்து அணி 15 வீரர்கள் கொண்ட தங்கள் அணியின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான இதுவரைசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆட்டத்தில்கூடஆடாத, டாம் பிளண்டல் (Tom Blundell) இப்பட்டியலில், இடம்பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணி முழு விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டல், டிரெண்ட் போல்ட், கோலின் டி கிராண்ட்ஹோம், லோகி பெர்குசன்,மார்டின் கப்தில், டாம் லேதம், காலின் முன்ரோ, ஜிம்மி நீஷம், மாட் ஹென்ரி, ஹென்ரி நிகோலஸ், மிட்சல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர்.
டாம் பிளண்டல் அணியில்பேக்கப் விக்கெட் கீப்பராகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.40 முதல்தர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆடியுள்ள டாம் பிளண்டல், 3 அரைசதம் உட்பட 766 ரன்களை எடுத்துள்ளார்.