ETV Bharat / sports

ஐபிஎல் தொடரை வைத்து உலகக்கோப்பை அணியை தேர்வு செய்ய முடியாது: எம்.எஸ்.கே. பிரசாத் - BCCI

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய வீரர்களின் ஆட்டத்திறனை வைத்து உலகக்கோப்பை அணி தேர்வு செய்யப்பட மாட்டாது என இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.கே பிரசாத்
author img

By

Published : Apr 10, 2019, 7:27 AM IST

12ஆவது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் ஏப்ரல் 15ஆம் தேதி அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்திய அணியில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கேள்வி, நான்காவது வரிசையில் எந்த வீரர் களமிறங்குவார் என்பது. தோனியைத் தவிர வேறு எந்த வீரர் கூடுதல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலம் பதில் கிடைக்கும் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் பேசுகையில்,

உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதிலும், ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய வீரர்களின் ஆட்டத்திறனை வைத்து உலகக் கோப்பை அணி தேர்வு செய்யப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை வைத்து இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வது முற்றிலும் தவறு என இந்திய வீரர் ரோஹித் ஷர்மா கருத்து தெரிவித்திருந்தார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.