ETV Bharat / sports

உலகக்கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

துபாய் : உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

bangladesh
author img

By

Published : Apr 16, 2019, 5:49 PM IST

12ஆவது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியான நிலையில், வங்கதேச அணிக் குழு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொர்டசா தலைமையிலான வங்கதேச அணியில், புதுமுக வீரர் அபு ஜெயத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான அபு ஜெயத் வங்கதேச அணிக்காக இதுவரை ஐந்து டெஸ்ட் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

காயம் காரணமாக உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முஸ்தாபிஸூர் ரஹ்மான் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அணியில் தனது இடத்தை கெட்டியாக பிடித்துள்ளார்.

இதைத்தவிர, ஆசியக் கோப்பையில் கடைசியாக ஆடிய மொசாடக் ஹுசைன் மீண்டும் வங்கதேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேசம் அணி விவரம்:

மஷ்ரஃபி மொர்டசா (கேப்டன்), தமீம் இக்பால், லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், முஷ்பிகுர் ரஹீம், சாகிப் அல் ஹசன், முகமது மிதுன், சபீர் ரஹ்மான், மொசாடக் ஹுசைன், முகமது சைபுதீன், மெகதி ஹசன் மிராஸ், ரூபல் ஹொசைன், முஸ்தாபிஸூர் ரஹ்மான், அபு ஜெயத், மெஹமதுல்லா.

Intro:Body:

SPORTS

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.