ETV Bharat / sports

Net Run Rate: நெட் ரன்ரேட் என்றால் என்ன?.. எவ்வாறு கணக்கிடப்படுகிறது? - cricket news tamil

world cup cricket 2023: நெட் ரன்ரேட் என்றால் என்ன? பொதுவாக புள்ளி பட்டியலை மையமாக வைத்து ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், ஆனால் இரண்டு அணிகள் ஒரே புள்ளியுடன் இருக்கும் பட்சத்தில், அந்த அணிகள் பெற்றிருக்கும் நெட் ரன்ரேட்டை வைத்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

south africa have a better run run rate in odi world cup 2023

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 11:03 PM IST

ஹைதராபாத்: நடப்பாண்டு உலக கோப்பை தொடர் கிட்டதட்ட பாதி கிணற்றை தாண்டி உள்ள நிலையில், இந்திய அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் அனைத்து போட்டிகளிலும் வெற்ற பெற்ற இந்திய அணி, நெட் ரன்ரேட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை விட பின்தங்கியே உள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்கா அணியானது, இந்திய அணியை விட ஒரு போட்டி குறைவாக வெற்றி பெற்றுள்ளனர். இந்த நெட் ரன்ரேட் விவகாரம் லீக் போட்டியின் முடிவில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே நெட் ரன்ரேட் ஆனது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது பற்றியது தான் இந்த தொகுப்பு.

உலக கோப்பை வரலாற்றில் நெட் ரன்ரேட்டால் (NRR) அரையுறுதிக்கு முன்னேற முடியாமல் போன அணிகள் பல இருக்கின்றன. நடப்பாண்டு உலக கோப்பையில், இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளிலுமே வென்று +1.353 என்ற நெட் ரன்ரேட்டுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் +2.370 மற்றும் +1.481 என இவர்களை விட ஒரு போட்டி அதிகம் வென்ற இந்திய அணியை விட சிறந்த நெட் ரன்ரேட்டை கொண்டுள்ளனர்.

The NRR calculation formula is as follows:

நெட் ரன் ரேட் = அடித்த மொத்த ரன்கள் / சந்தித்த மொத்த ஓவர்கள் - விட்டுக்கொடுக்கப்பட்ட மொத்த ரன்கள் / இன்னிங்ஸின் மொத்த ஓவர்கள்.

உதாரணத்திற்கு நடப்பாண்டு உலக கோப்பையில் இதுவரை இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சை எடுத்துக் கொள்வோம்.

இந்திய அணி தனது முதல் ஐந்து போட்டிகளில் அடித்த ரன்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - 41.2 ஓவர்களில் 201/4

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக - 35 ஓவர்களில் 273/2

பாகிஸ்தானுக்கு எதிராக - 30.3 ஓவர்களில் 192/3

வங்கதேசத்திற்கு எதிராக - 41.3 ஓவர்களில் 261/3

நியூசிலாந்துக்கு எதிராக - 48 ஓவர்களில் 274/6

மொத்தமாக 1,201 ரன்கள், 196 ஒவர் 2 பந்துகளில் ( கணக்கீடுகளுக்காக 196.33 ஓவர்கள் என எடுத்துக்கொள்வோம்)

ரன்கள் விகித கணக்கீடு = 1201/196.33 = 6.117.

நடந்துக்கொண்டிருக்கும் ஒருநாள் உலக கோப்பையில் முதல் ஐந்து போட்டிகளில் இந்திய அணி விட்டுக்கொடுத்த ரன்கள்:

ஆஸ்திரேலியா - 49.3 ஓவர்களில் 199

ஆப்கானிஸ்தான் - 50 ஓவர்களில் 272/8

பாகிஸ்தான் - 42.5 ஓவர்களில் 191

வங்கதேசம் - 50 ஓவர்களில் 256/8

நியூசிலாந்து - 50 ஓவர்களில் 273

மொத்தமாக 1,191 ரன்கள் 250 ஓவர்கள்.

ரன்கள் விகித கணக்கீடு = 1191/250 = 4.764

India NRR caculation:

6.117

-4.764

----------

= 1.353

----------

இவ்வாறே ஒவ்வொறு அணிக்கும் நெட் ரன்ரேட் ஆனது கணக்கிடப்படுகிறது. இதனாலேயே ஒவ்வொறு பந்துகளும், ஓவ்வொறு ரன்னும் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

மேலும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. ஆனால் மீதமுள்ள 4 போட்டிகளில் நல்ல வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி வங்கதேசத்திற்கு எதிராக 149, இலங்கைக்கு எதிராக 102, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 134 மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் விளைவாகவே இந்தியாவுடன் ஒப்பிடும் போது (+1.353), தென் ஆப்பிரிக்கா அணி (2.370) என்ற சிறப்பான நெட் ரன்ரேட்டை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: Aus vs Ned: 90 ரன்களில் சுருண்டது நெதர்லாந்து.. 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வரலாற்று வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.