ஹைதராபாத்: ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை இந்தியாவில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 6வது லீக் போட்டியாக நாளை நெதர்லாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
உலக கோப்பையில் நெதர்லாந்து: 1996ஆம் ஆண்டு தான் முதல் முறையாக நெதர்லாந்து அணி உலக கோப்பைக்கு தேர்வானது. இதுவரை நடைபெற்ற 12 எடிஷனில் நெதர்லாந்து அணி 1996, 2003, 2007, 2011 என 4 எடிஷனில் மட்டுமே விளையாடி உள்ளது. மொத்தமாக 20 போட்டிகளில் விளையாடி உள்ள இந்த அணி அதில் வெறும் இரண்டு போட்டி மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.
நெதர்லாந்து - நியூசிலாந்து: இந்த இரு அணிகளும் இதுவரை உலக கோப்பை வரலாற்றில் ஒரே ஒரு முறையே சந்தித்துள்ளது. உலக கோப்பைக்கு தேர்வாகி அவர்கள் முதல் போட்டியாக நியூசிலாந்தை சந்தித்தனர். அந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது. அதன் பின் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டகளை இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
-
Latest team news from the New Zealand camp ahead of their second #CWC23 match.
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details 👇https://t.co/VFXKceoWfu
">Latest team news from the New Zealand camp ahead of their second #CWC23 match.
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 8, 2023
Details 👇https://t.co/VFXKceoWfuLatest team news from the New Zealand camp ahead of their second #CWC23 match.
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 8, 2023
Details 👇https://t.co/VFXKceoWfu
நாளை இந்த இரு அணிகளும் உலக கோப்பையில் இரண்டாவது முறையாக சந்திக்கின்றது. நியூசிலாந்து அணியை பார்க்கையில், கடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எளிதாக வென்றது. 283 ரன்கள் இலக்கை அந்த அணி 36.2 ஓவர்களிலேயே சேஸ் செய்தது. தொடக்க வீரரான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்தரா அருமையாக விளையாடி சதம் விளாசினர்.
மிடில் ஆடர் பேட்மேன்களான டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். அதே போல் பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விக்கெட்களை கைப்பற்றி நல்ல நிலையிலேயே உள்ளனர்.
மறுபுறம் நெதர்லாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியை அனைத்து விக்கெட்களையும் இழக்க செய்தனர். குறிப்பாக பேட்டிங் ஆல்-ரவுண்டர் பாஸ் டி லீடே 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இருப்பினும் முழுநேர பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை அதிகம் எடுப்பதில் திட்டமிட வேண்டும்.
அதே போல் பேட்டிங்கிலும், தொடக்க வீரர்களான விக்ரம்ஜித் சிங் மற்றும் பாஸ் டி லீடே மட்டுமே அணிக்கு ஒரளவு ரன்களை சேர்க்க உதவினர். மற்ற வீரர்கள் அனைவரும் சேர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பேட்டிங்கில் அனைவரும் ஒரு சேர ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் மட்டுமே அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஒய்வுக்கு இன்னும் சிறுது நாட்கள் தேவைப்படுகிறது என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "லாக்கி பெர்குசன் மற்றும் டிம் சவுதி ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு, அவர்கள் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதற்கு தகுதியாக உள்ளனர். மேலும், கேன் வில்லியம்சன் முழுமையாக குனமடைய இன்னும் சில நாட்கள் தேவைபடுகிறது" என அவர் கூறினார்.
இரு அணி வீரர்கள் பட்டியல்
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிடமனூரு, ஸ்காட் எட்வர்ட்ஸ்(விக்கெட் கீப்பர் & கேப்டன்), சாகிப் சுல்பிகர், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், பால் வான் மீகெரென், ரியான் க்ளீன், ஷரீஸ் அஹ்மத் பாரேசி, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.
நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம்(விக்கெட் கீப்பர் & கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, டிரெண்ட் போல்ட், இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிம் சவுத்தி.
இதையும் படிங்க: இவருக்கு இதான் வேலை! மைதானத்திற்குள் ஜார்வோ அட்ராசிட்டி! அதிர்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள்!