மும்பை: ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் இந்திய - இலங்கை மோதின. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
-
Mohammed Shami continues his unreal #CWC23 run with yet another five-wicket haul ⚡@mastercardindia Milestones 🏏#INDvSL pic.twitter.com/DPwu9vn6Xi
— ICC (@ICC) November 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mohammed Shami continues his unreal #CWC23 run with yet another five-wicket haul ⚡@mastercardindia Milestones 🏏#INDvSL pic.twitter.com/DPwu9vn6Xi
— ICC (@ICC) November 2, 2023Mohammed Shami continues his unreal #CWC23 run with yet another five-wicket haul ⚡@mastercardindia Milestones 🏏#INDvSL pic.twitter.com/DPwu9vn6Xi
— ICC (@ICC) November 2, 2023
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா - சுப்மன் கில் களம் இறங்கினர். ஆட்டத்தில் முதல் பந்திலேயே ஃபோருடன் தொடங்கிய ரோகித் சர்மா, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து விராட் கோலி - கில்லுடன் கைகோர்க்க, இந்த கூட்டணி சிறப்பாகச் செயல்பட்டு நிதானமான முறையில் அணிக்கு ரன்களை சேர்த்தது.
இருவரும் அரைசதம் கடந்தனர். இலங்கை அணி விக்கெட்களை வீழ்த்த முடியாமல் தடுமாறி வந்தது. ஒரு கட்டத்தில் சதம் நெருங்கிய கில் 92 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே 88 ரன்களில் விராட் கோலியும் ஆட்டமிழந்தார். பின்னர் கே.எல்.ராகுல் 21, சூர்யகுமார் யாதவ் 12 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். போட்டியின் 48 ஓவரை வீசிய மதுஷங்க அந்த ஓவ்ரின் மூன்றாவது பந்தில் ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் அவர் 82 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
-
SEMI-FINALS 🔒
— ICC (@ICC) November 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
India have booked their berth for the #CWC23 knockouts 👏 pic.twitter.com/Q0UVffp6iY
">SEMI-FINALS 🔒
— ICC (@ICC) November 2, 2023
India have booked their berth for the #CWC23 knockouts 👏 pic.twitter.com/Q0UVffp6iYSEMI-FINALS 🔒
— ICC (@ICC) November 2, 2023
India have booked their berth for the #CWC23 knockouts 👏 pic.twitter.com/Q0UVffp6iY
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்துள்ளது. இலங்கை அணி பந்து வீச்சு சார்பில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இலங்கை அணி 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் இலங்கை அணிக்கு அதிர்ச்சியை அளித்தனர். இன்னிங்ஸின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே நிசங்கா ஆட்டமிழத்து, விக்கெட் கணக்கை தொடங்கி வைத்தார்.
அதன்பின் திமுத் கருணாரத்ன 0, சதீர சமரவிக்ரம 0, குசல் மெண்டிஸ் 1, சரித் அசலங்கா1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிராஜ் 3 விக்கெட், ஷமி 5 விக்கெட் என இலங்கையின் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்தனர். இதனால் இலங்கை அணி 19.4 ஓவர்கள் முடிவில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. மேலும், இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவது எப்போது?