சென்னை: உலக கோப்பை தொடரின் 16வது லீக் போட்டி நாளை (அக்.18) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதனாத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதில், ஆப்கானிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரானது, வரும் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து என 10 அணிகள் விளையாடி வருகின்றன.
நாளை போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு: நாளை நடக்கவுள்ள 16வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து அணி முதல் மூன்று போட்டியில் தனது வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். அதே உத்வேகத்துடன் இந்த போட்டியில் களம் காண உள்லது.
மறுபுறம் ஆப்கானிஸ்தான் அணி, முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும், தனது மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. அதனை தொடர்ந்து அந்த அணி தனது இரண்டாவது வெற்றியை நோக்கி களம் இறங்குகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன்-உல்-ஹக், ஆகிய வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி உள்ளதால், சென்னை மைதானமானது அவர்களுக்கு மிகவும் பழக்கப்பட்டதாகவே இருக்கும்.
அதே சமயம் நியூஸிலாந்து அணி, வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில், நிதானமானத்தின் மூலம் வெற்றியை தக்க வைத்துக் கொண்டது. சென்னை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், நியூசிலாந்து அணி மீண்டும் அதேயே செய்ய விரும்பும். மேலும், அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் பங்கு பெறவில்லை.
அவருக்கு பதிலாக வில் யங் களம் இறக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் பவுண்டரிகள் வித்தியாசத்தில் கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது நியூஸிலாந்து அணி. இதுவரை இந்த அணி உலகக் கோப்பையை வென்றது இல்லை என்பது குறிப்பிட தக்கது.
இந்த அணியானது, இதுவரை நடந்த உலக கோப்பையில் மொத்தம் 96 ஆட்டங்கள் ஆடியுள்ளது. இதில் 54 ஆட்டங்களில் வெற்றியும், 39 ஆட்டங்களில் தோல்வியும், 1 போட்டி டை மற்றும் 2 போடிகளுக்கு எவ்வித முடிவும் இல்லை. இதேப்போல், ஆப்கானிஸ்தான் அணியானது, முதன் முதலில், 2015ஆம் ஆண்டு தான் உலக கோப்பையில் அடியெடுத்து வைக்கிறது. இந்த அணி 2015, 2019 உலக கோப்பை தொடரில் மொத்தமே ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
சென்னையின் ஆடுகளம்: சென்னை சேப்பாக்கம் மைதானம் என்றாலே, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று அனைத்து தரப்பினரின் கருத்தாகும். இந்த ஆடுகளம் பிளாக் சாயில் எனப்படும் கருப்பு மண்ணால், உறுவாக்கபட்ட ஆடுகளம். இந்த ஆடுகளம் என்பது முதல் 10 ஓவர்கள் வரை பேட்ஸ்மேன்கள் விளையாடுவது கடினமாக இருக்கும். ஆனால், நேரம் செல்லச் செல்ல ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும்.
மேலும், இந்த மைதானத்தில் நடைபெற்ற கடந்த இரு போட்டிகளில் சுழற்பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு என இரண்டுக்குமே சாதகமாக இருந்தது. அதனால் இந்த போட்டி யார் பக்கம் சொல்லும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: SA Vs NED: தென்னாப்பிரிக்கா அணிக்கு 246 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து!