ETV Bharat / sports

தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு - தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் 21ஆவது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

toss
author img

By

Published : Jun 15, 2019, 6:09 PM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்க, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மழைக்காரணமாக இப்போட்டிக்கான டாஸ் போடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தாமதமாக போடப்பட்ட டாஸை வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி குவிண்டன் டி காக், ஹாசிம் அம்லா, எய்டன் மார்க்ரம், டு ப்ளஸிஸ் (கேப்டன்), ராஸி வேன் டெர் டுஸன், டேவிட் மில்லர், பிலுக்குவாயோ, கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், பியூரன் ஹென்ரிக்ஸ்.

ஆப்கானிஸ்தான் அணி ஹஸ்ரத்துல்லா ஷாஷாய், நூர் அலி ஷாட்ரான், ரஹ்மத் ஷாத், ஹஸ்மத்துல்லா ஷாகிடி, அஸ்கர் ஆஃப்கன், குலாபதின் நயீப் (கேப்டன்), மொகம்மது நபி, இக்ரம் அலி கில், ரஷித் கான், அப்தப் ஆலம், ஹமீத் ஹாசன்.

இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கி ஆடிவருகிறது. எனினும் அங்கு மழைக்கான அறிகுறி தொடர்வதால் இப்போட்டியில் இரண்டு அணிகளில் ஒன்று வெற்றிபெறுமா இல்லை மீண்டும் மழை உலகக்கோப்பையில் தனது தடத்தை பதிக்குமா என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

Intro:Body:

CWC19 - SA vs AFG toss

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.