ETV Bharat / entertainment

’சூர்யா 45’ படத்தில் நடிக்கும் 3 கதாநாயகிகள்; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - SURIYA 45 ACTORS

Suriya 45 actors: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 45’ படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் மற்றும் அதில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

சூர்யா 45 பட பூஜை புகைப்படம்
சூர்யா 45 பட பூஜை புகைப்படம் (Credits - @DreamWarriorpic X account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 3 hours ago

சென்னை: நடிகர் சூர்யா 45வது திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘சூர்யா 45’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் ஆரம்பம் முதல் கோவையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு முன்னதாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

20 வயதான இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த ஆண்டு மிகவும் பிரபலமடைந்த 'ஆசை கூட', 'கட்சி சேர' உள்ளிட்ட ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து வரும் 'பென்ஸ்' திரைப்படத்திற்கும் இசையமைப்பத்து வருகிறார். இதனைத்தொடர்ந்து நடிகை த்ரிஷா சூர்யா 45 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.

20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா, த்ரிஷா இணைந்து நடிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து சூர்யா 45 படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் மற்றும் அதில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்திரன்ஸ், யோகி பாபு, சுவாசிகா, நட்டி, ஷிவதா, சுப்ரீத் ரெட்டி, அனகா ஆகியோர் நடிக்கின்றனர். ’லப்பர் பந்து’ திரைப்படம் மூலம் பிரபலமான சுவாசிகா இப்படத்தில் கதாநாயகிக்கு இணையான கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் ’சூர்யா 45’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் கலை இயக்குநராக அருண் வெஞ்சரமூடு, படத்தொகுப்பாளராக கலைவாணன் ஆகியோர் பணிபுரிகின்றனர். கடைசியாக சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று, சமூக வலைதளத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: பிரபாஸ் படத்தில் ஸ்பெஷல் பாடலுக்கு குத்தாட்டம் போடும் நயன்தாரா? - NAYANTHARA IN PRABHAS MOVIE

இதனால் சூர்யா நடித்து வரும் கார்த்திக் சுப்புராஜ் படம் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 ஆகிய படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி என புதிய கூட்டணிகளில் அடுத்தடுத்து சூர்யாவுக்கு வெற்றிப் படங்களாக அமையும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.