உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 18ஆவது போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிரஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனியின் மகள் ஸிவா தோனி, இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உடன் போட்டி போட்டுக் கொண்டு கத்துகிறார். இந்த வீடியோவை ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.