வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி டவுன்டனில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 321 ரன்களை குவித்தது.
இதனிடையே, இப்போட்டியின் 49ஆவது ஓவரின் போது ஓஷேன் தாமஸின் பேட் ஸ்டெம்பில் பட்டது. முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் வீசிய ஓவரை எதிர்கொண்ட அவர், பந்தை அடிப்பதற்காக பேட்டை ஓங்கினார். ஆனால் ஷாட்டை விளையாடி முடித்தப்பிறகு, தனது பேட்டை பின்னாடி வீசும்போது எதிர்பாராவிதமாக ஸ்டெம்ப் மீது பட்டது. (ஹிட்விக்கெட்)
-
Good Decision By ICC😍😍😍 pic.twitter.com/X5PBWrbQ8e
— 🙅Mahatma Aandhi😑🔫 (@AnkushGade12) June 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Good Decision By ICC😍😍😍 pic.twitter.com/X5PBWrbQ8e
— 🙅Mahatma Aandhi😑🔫 (@AnkushGade12) June 17, 2019Good Decision By ICC😍😍😍 pic.twitter.com/X5PBWrbQ8e
— 🙅Mahatma Aandhi😑🔫 (@AnkushGade12) June 17, 2019
இதனால், வங்கதேச வீரர்கள் ஹிட்விக்கெட் முறையில் அவுட் என ரிவ்யூ செய்தனர். ஆனால், ஷாட்டை முடித்தப்பிறகே தாமஸ், பேட்டை ஸ்டெம்பால் தாக்கியதால், மூன்றாவது நடுவர் நாட்அவுட் வழங்கினார். நடுவரின் தீர்ப்பால், வங்கதேச வீரர்கள் அதிருப்தி அடைந்தனர்.
பொதுவாக, பேட்ஸ்மேன் தனது ஷாட்டை விளையாடி முடித்த பின்னர், பந்து டெட்பால் என கருதப்படுவது வழக்கம்.இந்த அடிப்படையில்தான் நடுவர்கள் அவருக்கு நாட்அவுட் என தீர்ப்பு வழங்கினர். இருப்பினும், இந்த சம்பவம் ஒரு சில ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.