சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (ஜுன் 20) அரைமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இந்திய கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 29 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர்.
கோலிக்கு பின் அணியே காலி
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கோலி 44 ரன்களிலும், பந்த் 4 ரன்களிலும் ஜேமீசனிடம் வீழ்ந்தனர். இதன்பின்னர், நிலைத்து நின்று ஆடிவந்த ரஹானே 49 ரன்களிலும், அஸ்வின் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
உணவுக்குப் பின்னர் இடைவேளை
உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டபோது, இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்திருந்தது.
இடைவேளைக்கு பின்னர் ஜடேஜா 15 ரன்களிலும், இஷாந்த் 2 ரன்களிலும் இரண்டாவது செஷனை தொடங்கினர். ஆனால், ஆட்டம் ஆரம்பித்த இரண்டாவது ஓவரை ஜேமீசன் வீச வந்தார்.
அந்த ஓவரின் நான்காவது பந்தில் இஷாந்த் சர்மாவையும், ஐந்தாம் பந்தில் பும்ராவையும் வீழ்த்தினார். போல்ட் வீசிய அடுத்த ஓவரில் ஜடேஜா 15 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
-
That will be Tea on Day 3 of the #WTC21 Final.
— BCCI (@BCCI) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
New Zealand are 36/0, trail #TeamIndia (217) by 181 runs in the first innings.
Scorecard - https://t.co/CmrtWsugSK pic.twitter.com/KHFe9YSbQ1
">That will be Tea on Day 3 of the #WTC21 Final.
— BCCI (@BCCI) June 20, 2021
New Zealand are 36/0, trail #TeamIndia (217) by 181 runs in the first innings.
Scorecard - https://t.co/CmrtWsugSK pic.twitter.com/KHFe9YSbQ1That will be Tea on Day 3 of the #WTC21 Final.
— BCCI (@BCCI) June 20, 2021
New Zealand are 36/0, trail #TeamIndia (217) by 181 runs in the first innings.
Scorecard - https://t.co/CmrtWsugSK pic.twitter.com/KHFe9YSbQ1
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவர்களை விளையாடி 217 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், கோலி 44 ரன்களும் சேர்த்துள்ளனர்.
நியூசிலாந்து அணியில் ஜேமீசன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரின் ஐந்தாவது ஐந்து-விக்கெட் ஹால் என்பது குறிப்பிடத்தக்கது
லேத்தம் - கான்வே
நியூசிலாந்து அணியின் இரண்டு இடக்கை பேட்ஸமேன்களான லேத்தம் - கான்வே தொடக்க ஜோடி மிகப்பொறுமையாக இந்திய பந்துவீச்சைக் கையாண்டது.
முதல் ஒன்பது ஓவர் ஸ்பெல்லை வீசிய இஷாந்த் - பும்ரா இணை, விக்கெட் ஏகும் எடுக்காமல் 17 ரன்களை விட்டுக்கொடுத்தது. அதன்பின் வந்த ஷமி, தன் பங்கிற்கு ஆக்ரோஷ பந்துவீச்சை கையாண்டார். உடம்பில் அங்கு அங்கு அடி வாங்கிய போதும், அந்த ஜோடி ஷமியையும் கவனமாகக் கையாண்டது. மறுமுனையில் இஷாந்த் சர்மாவும் மிரட்டிப்பார்த்தார்,விக்கெட் மட்டும் விழுந்தபாடில்லை.
-
#TeamIndia are all out for 217 in the first innings of the #WTC21 Final.
— BCCI (@BCCI) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
New Zealand innings underway.
Live - https://t.co/CmrtWsugSK #INDvNZ #WTC21 pic.twitter.com/lfv9SDNC1z
">#TeamIndia are all out for 217 in the first innings of the #WTC21 Final.
— BCCI (@BCCI) June 20, 2021
New Zealand innings underway.
Live - https://t.co/CmrtWsugSK #INDvNZ #WTC21 pic.twitter.com/lfv9SDNC1z#TeamIndia are all out for 217 in the first innings of the #WTC21 Final.
— BCCI (@BCCI) June 20, 2021
New Zealand innings underway.
Live - https://t.co/CmrtWsugSK #INDvNZ #WTC21 pic.twitter.com/lfv9SDNC1z
இறுதிப்போட்டியின் முதல் சுழல்
இந்திய கேப்டன் விராட் கோலி 15ஆவது ஓவரில் தனது ஆஸ்தான சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை களமிறக்கினார். அஸ்வினும், ஷமியும் தொடர்ந்து தாக்குதல் நடத்தியும் நியூசிலாந்து இணை மசியவில்லை.
இதனால், தேநீர் இடைவேளைக்கு முன் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை எடுத்துள்ளது. லேத்தம் 17(70) ரன்களுடனும், கான்வே 18(56) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
-
Devon Conway and Tom Latham have gotten 🇳🇿 off to a solid start 🏏
— ICC (@ICC) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
After 10 overs, they are 19/0.#WTC21 Final | #INDvNZ | https://t.co/8BooccMbbC pic.twitter.com/EhF8Uyhtj3
">Devon Conway and Tom Latham have gotten 🇳🇿 off to a solid start 🏏
— ICC (@ICC) June 20, 2021
After 10 overs, they are 19/0.#WTC21 Final | #INDvNZ | https://t.co/8BooccMbbC pic.twitter.com/EhF8Uyhtj3Devon Conway and Tom Latham have gotten 🇳🇿 off to a solid start 🏏
— ICC (@ICC) June 20, 2021
After 10 overs, they are 19/0.#WTC21 Final | #INDvNZ | https://t.co/8BooccMbbC pic.twitter.com/EhF8Uyhtj3
இரண்டாம் செஷன் நிலவரம்
இந்தியா அணி: 3.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 6 ரன்கள்.
நியூசிலாந்து அணி: 21 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள்.
இதையும் படிங்க: WTC FINAL: அடுத்த செஷனுக்கு தாங்குமா இந்தியா; மிரட்டும் ஜேமீசன், வாக்னர்