சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (ஜுன் 20) அரைமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இந்திய கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 29 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர்.
ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களிலேயே, கேப்டன் கோலி ஜேமீசனிடம் தனது விக்கெட்டை இழந்தார். அவர் இன்று ரன் ஏதும் எடுக்காத நிலையில், 44(132) ரன்களுக்கு நடையைக்கட்டினார். அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரிஷப் பந்த் அடுத்து களமிறங்கினார். ஆனால், அவரும் 4(22) ரன்களிலேயே ஜேமீசனிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தார்.
-
Kyle Jamieson strikes again to dismiss Rishabh Pant.
— ICC (@ICC) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A fantastic catch by Tom Latham in the slips 👏
🇮🇳 are 156/5.
#WTC21 Final | #INDvNZ | https://t.co/fbqJuBk9wF pic.twitter.com/GysPNoY8Xs
">Kyle Jamieson strikes again to dismiss Rishabh Pant.
— ICC (@ICC) June 20, 2021
A fantastic catch by Tom Latham in the slips 👏
🇮🇳 are 156/5.
#WTC21 Final | #INDvNZ | https://t.co/fbqJuBk9wF pic.twitter.com/GysPNoY8XsKyle Jamieson strikes again to dismiss Rishabh Pant.
— ICC (@ICC) June 20, 2021
A fantastic catch by Tom Latham in the slips 👏
🇮🇳 are 156/5.
#WTC21 Final | #INDvNZ | https://t.co/fbqJuBk9wF pic.twitter.com/GysPNoY8Xs
சொல்லியெடுத்த வாக்னர்
அதைத்தொடர்ந்து ஜடேஜா களம்கண்டார். ரஹானே நேற்றிலிருந்து பொறுமையாக ஆடிவந்த நிலையில், அவருடைய விக்கெட்டை எடுக்க நியூசிலாந்து வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
வாக்னர் 79ஆவது ஓவரின் மூன்றாம் பந்தை பவுன்சராக வீசினார். அந்த பந்தை லெக் திசையில் காற்றில் பறக்கவிட்டு, இரண்டு ரன்களைச் சேர்த்தார், ரஹானே.
இதைக் கவனித்த வாக்னர், ஸ்கொயர் லெக் திசையில் டாம் லெத்தமை நிற்க வைத்து, மீண்டும் ஒரு ஸ்லோ பவுன்சரை வீசினார். கடைசிப்பந்தை போலவே ரஹானே இதையும் லெக் திசையில் காற்றில் பறக்கவிட, பந்து அழகாக சென்று லெத்தமின் கையில் சென்று அமர்ந்தது.
-
Ajinkya Rahane's fighting knock of 49 comes to an end!
— ICC (@ICC) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The short delivery does the trick for Neil Wagner again 👊
🇮🇳 are 182/6. #WTC21 Final | #INDvNZ | https://t.co/5QFkQd1FlR pic.twitter.com/yYMOO23Lm3
">Ajinkya Rahane's fighting knock of 49 comes to an end!
— ICC (@ICC) June 20, 2021
The short delivery does the trick for Neil Wagner again 👊
🇮🇳 are 182/6. #WTC21 Final | #INDvNZ | https://t.co/5QFkQd1FlR pic.twitter.com/yYMOO23Lm3Ajinkya Rahane's fighting knock of 49 comes to an end!
— ICC (@ICC) June 20, 2021
The short delivery does the trick for Neil Wagner again 👊
🇮🇳 are 182/6. #WTC21 Final | #INDvNZ | https://t.co/5QFkQd1FlR pic.twitter.com/yYMOO23Lm3
இதனால், ரஹானே 49(117) ரன்களில் தனது அரை சதத்தைத் தவறிவிட்டு நடையைக் கட்டினார்.
அஸ்வினும் அவுட்
இதன்பின்னர், நியூசிலாந்து அணி 82ஆவது ஓவரில் தனது இரண்டாவது புது பந்தை பெற்றுக்கொண்டது. சிறிதுநேரம் களத்தில் அதிரடி காட்டிய அஸ்வின் 22(27) ரன்களில் சவுத்திடம் வீழ்ந்தார்.
இதன்மூலம் மதிய உணவு இடைவேளை விடப்பட்ட நிலையில், இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா 15(46) ரன்களுடனும், இஷாந்த் சர்மா 2(6) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
-
Edges, crashes and near-misses – the most riveting moments of fast bowling from the first-innings so far, the Thums Up Thunderbolts ⚡️@ThumsUpOfficial | #WTC21 Final | #INDvNZ pic.twitter.com/bkfPRSMKDw
— ICC (@ICC) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Edges, crashes and near-misses – the most riveting moments of fast bowling from the first-innings so far, the Thums Up Thunderbolts ⚡️@ThumsUpOfficial | #WTC21 Final | #INDvNZ pic.twitter.com/bkfPRSMKDw
— ICC (@ICC) June 20, 2021Edges, crashes and near-misses – the most riveting moments of fast bowling from the first-innings so far, the Thums Up Thunderbolts ⚡️@ThumsUpOfficial | #WTC21 Final | #INDvNZ pic.twitter.com/bkfPRSMKDw
— ICC (@ICC) June 20, 2021
நியூசிலாந்து தரப்பில் ஜேமீசன் 3 விக்கெட்டுகளையும், வாக்னர் 2 விக்கெட்டுகளையும், சவுத்தி, போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
முதல் செஷன் நிலவரம்
மூன்றாம் நாளின் முதல் செஷனில் இந்திய அணி கூடுதலாக 4 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதையும் படிங்க: மகளிர் டெஸ்ட்: உறுதியாக போராடி டிராவில் முடித்த இந்திய அணி