ETV Bharat / sports

டிராவில் முடிந்தது இந்திய அணி பயிற்சி ஆட்டம்: குவாரன்டைனுக்குப் பின் வீரர்கள் உற்சாகம்

இந்திய இன்டரா-ஸ்குவார்ட் பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்தநிலையில், இரண்டு நாள் ஆட்டத்தின் புகைப்படத்தையும், காணொலியையும் பிசிசிஐ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இந்திய அணி பயிற்சி ஆட்டம்
இந்திய அணி பயிற்சி ஆட்டம்
author img

By

Published : Jun 13, 2021, 9:32 AM IST

சவுத்தாம்ப்டன்(இங்கிலாந்து): இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளையும் விளையாடவுள்ளது.

தனிமைக்குப் பின் இனிமை

கடந்த ஜுன் 3ஆம் தேதி இங்கிலாந்து வந்த இந்திய வீரர்கள், தங்களது ஒரு வார தனிமைப்படுத்துதலுக்குப் பின், நேற்று முன்தினம் (ஜுன் 11) தங்களுக்குள்ளேயே இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தை விளையாடினார்கள். விராட் கோலி கேப்டனாக ஒரு தரப்பும், கே.எல்.ராகுல் கேப்டனாக மற்றொரு தரப்பும் மோதின. இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

இரண்டு நாள் ஆட்டத்தின் புகைப்படங்கள், காணொலிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சம்பவத்திற்கு ரெடியாகும் இந்தியா

அந்தக் காணொலியில் இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்வது, கே.எல்.ராகுலுக்கு பந்துவீசுவது என மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். ரோஹித், சுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரிடமிருந்தும் ஆக்ரோஷ ஷாட்களைக் காண முடிந்தது.

சுப்மன் கில் 135 பந்துகளில் 85 ரன்கள் அடிக்க, ரிஷப் பந்த் 94 பந்துகளில் 121 ரன்கள் குவித்து அசத்தினார். இஷாந்த் சர்மா 36 ரன்கள் விட்டுக்கொடுத்து, மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். புதுமுக வீரர் அர்சான் நாக்வஸ்வல்லாவும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றார்.

ஏன் இன்டரா-ஸ்குவார்ட் வார்ம்-அப்?

மூன்றரை மாதக்காலம் இங்கிலாந்தில் விளையாட இருக்கும் இந்திய அணி, கரோனா பரவல் காரணமாக உள்ளூர் அணிகளுடனோ அல்லது கவுண்டி அணிகளுடனோ விளையாடுவதற்கான வாய்ப்பில்லாததால் இந்திய அணிக்குள்ளேயே இரு தரப்பாக பயிற்சி ஆட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

வரும் வெள்ளிக்கிழமை (ஜுன் 18) அன்று சவுத்தாம்ப்டன் 'ரோஸ் பவுல்' மைதானம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தவான் கேப்டன், நடராஜன் அவுட்: இந்திய அணி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.