ETV Bharat / sports

எதிரணி ஃபீல்டிங்கை சரி செய்த தோனி - பயிற்சி ஆட்டம்

லண்டன்: வங்கதேச அணியுடனான பயிற்சி போட்டியின்போது அந்த அணியின் ஃபீல்டிங்கை தோனி சரிசெய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

dhoni
author img

By

Published : May 29, 2019, 1:09 PM IST

கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்க இருக்கிறது. முன்னதாக அனைத்து அணிகளும் பயிற்சி போட்டிகளில் விளையாடிவருகின்றன. அந்த வகையில் இந்திய அணி முதலில் நியூசிலாந்து அணியுடன் விளையாடிய பயிற்சி போட்டியில் தோல்வி அடைந்தது.

இதனையடுத்து நேற்று வங்கதேசத்துடன் இந்தியா பயிற்சி போட்டியில் விளையாடியது. அந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த இந்திய அணி தோனி, ராகுலின் அதிரடியால் 359 ரன்கள் குவித்தது. குறிப்பாக, இந்திய அணியில் மிகப்பெரும் கேள்விக்குறியாக இருந்த நான்காம் இடத்தில் களமிறங்கி ராகுல் அடித்த சதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அடுத்ததாக ஆடிய வங்கதேச அணி 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்நிலையில், இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 40ஆவது ஓவரை ஷபிர் வீச ஓடிவந்தார். ஆனால், லெக் சைடில் பீல்ட் செட் செய்யப்பட்ட இடத்தில் வங்கதேச வீரர் நிற்காததை கவனித்த தோனி பந்துவீச்சாளரை உடனடியாக நிறுத்தி அதனை சுட்டிக்காட்டினார். இதனையடுத்து அந்த வீரர் பீல்ட் செட் செய்யப்பட்ட இடத்தில் வந்து நின்றார்.

தோனியின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் வரவேற்பளித்துள்ளனர். மேலும், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Intro:Body:

dhoni

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.