ETV Bharat / sports

காயத்தால் பயிற்சி ஆட்டத்திலிருந்து பாதியில் வெளியேறிய மார்க் வுட்! - மார்க் வுட்

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில்போது இடதுகாலில் ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் போட்டியின் பாதியிலிருந்து வெளியேறினார்.

mark
author img

By

Published : May 26, 2019, 11:26 AM IST

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பின்னர் ஆஸ்திரேலிய வீரர்களின் பேட்டிங்கின்போது பந்துவீசிய மார்க் வுட், தனது நான்காவது ஓவரின்போது இடதுகாலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆட்டத்தின் பாதியிலிருந்து வெளியேறினார்.

இது குறித்து இங்கிலாந்து நிர்வாகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க் வுட் மருத்துவக் குழுவினருடன் நேரம் செலவிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இங்கிலாந்து அணி வீரர்களான இயன் மோர்கன், மார்க் வுட் ஆகியோர் அடுத்தடுத்து காயம் காரணமாக பயிற்சி போட்டிகளில் பங்கேற்காதது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.