உலக கோப்பை 38வது லீக் ஆட்டம் எட்ஜ்பஸ்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்தன. முதலில் டாஸ் வென்ற இங்கிலந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் ஜானி பேர்ஸ்ட்டோ மற்றும் ஜோஸன் ராய் ஜோடி முதல் விக்கெட் இழப்பிற்க்கு 160 ரன்கள் சேர்த்தது. ஜோஸன் ராய் 57 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குல்தீப் யாதவிடம் தனது விக்கெட்டினை பரிகொடுத்தார்.
நிர்னயிக்கப்பட்ட 50 ஒவர் முடிவில் இங்கிலந்து அணி 7விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பெர்ஸ்டோ 111 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 79 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 338 என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல், ரன் ஏதும் எடுக்காமல் வோக்ஸ்யிடம் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.
அதன் பின் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ரோகித் சர்மா ஜோடி நிலைத்து ஆடியது. 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் கோலி ஃப்ளங்கிட்டிடம் தனது விக்கெட்டினை இழந்தார். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 109 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து வோக்ஸிடம் தனது விக்கெட்டினை இழந்தார். கடைசி வரை போராடிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலந்து அணி வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய இங்கிலந்து அணியின் ஜோனி பேர்ஸ்டோ ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டர்.