2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டூ ப்ளஸிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
![முஸ்ஃபிகுர் ரஹீம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3452480_mus.jpg)
தொடக்கம் முதலே வங்கதேசம் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தியது. தொடக்க வீரர் சவுமியா சர்கார் 30 பந்துகளில் 42 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய சாகிப் அல் ஹசன் 75 ரன்களிலும், முஸ்ஃபிகுர் ரஹீம் 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சின் கடைசி பகுதியில் மஹ்மதுல்லா 33 பந்துகளில் 46 ரன்கள் அடித்ததன் மூலம் வங்கதேச அணி 330 ரன்கள் குவித்தது.
![சாகிப் அல் ஹசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3452480_sha.jpg)
தென்னாப்பிரிக்கா சார்பில் பெலுக்வாயோ 10 ஓவர்கள் வீசி 52 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்களையும், இம்ரான் தாஹிர் 10 ஓவர்கள் வீசி 57 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினர்.