கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 19 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இவ்வைரஸ் பரவுதலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 24ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
இந்நிலையில் இந்தியா அண்டர்-19 கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால், தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாம் அனைவரும் பொறுப்புள்ள குடிமகனாக நமது நாட்டிற்காக நிற்போம். மேலும் அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்' என்று பதிவிட்டு, அதனுடன் காணொலி ஒன்றையும் இணைத்துள்ளார்.
-
Stand with the country. Let's all be responsible citizens . Stay at home, Stay safe. pic.twitter.com/BwCsoKtXwN
— Yashasvi Jaiswal (@yashasvi_j) March 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stand with the country. Let's all be responsible citizens . Stay at home, Stay safe. pic.twitter.com/BwCsoKtXwN
— Yashasvi Jaiswal (@yashasvi_j) March 27, 2020Stand with the country. Let's all be responsible citizens . Stay at home, Stay safe. pic.twitter.com/BwCsoKtXwN
— Yashasvi Jaiswal (@yashasvi_j) March 27, 2020
அந்தக் காணொலியில், 'கோவிட்-19 என்ற கொடிய தொற்றுநோய் உலகம் முழுவது பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எங்கள் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், பிறத்துறையைச் சார்ந்தவர்கள் உதவிவருகின்றனர். நீங்கள்தான் எங்கள் நாட்டினுடைய நிஜமான ஹீரோக்கள். உங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்கிறேன். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:கரோனாவிலிருந்து மீண்ட 101 வயது மூதாட்டி: அஸ்வின் போட்ட ட்வீட்