மகளிர் கிரிக்கெட்டில் தலைசிறந்த தொடக்க வீராங்கனையாக திகழ்பவர் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தானா. ஒருநாள், டி20 என ஃபார்மேட் மாறினாலும் இவரது ஆட்டம் மட்டும் மாறவே மாறாது. இடதுகை வீராங்கனையான இவர் ஆடும் ஷாட்டுகள் அனைத்தும் துல்லியமாக இருக்கும். இதனால், இவருக்கென தன ரசிகர்கள் பட்டாளமே உள்ளன. இந்தியா மட்டுமின்றி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளிலும் இவர் தனக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
2017ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மூலம் மந்தானா, கிரிக்கெட்டில் அசூர வளர்ச்சி பெற்றார். அந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து பேக் டூ பேக் இரண்டு சதங்களை விளாசி அசத்தினார். இவர் அணிக்கு தந்த சிறப்பான ஓப்பனிங்கால் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றது. இதைத்தொடர்ந்து, 2018இல் இவரது ஃபார்ம் அடுத்த கட்டத்துக்கு சென்றது, இந்திய அணியின் பேட்டிங்கிற்கு பலத்தை தந்தது. கடந்த ஆண்டில் 12 ஒருநாள் போட்டிகளில் ஆடிய இவர், 7 அரைசதம், ஒரு சதம் என 669 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தனது சிறப்பான ஆட்டத்தால், ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அதுமட்டுமல்லாது, ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் வென்றார். அதேசமயம், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறியதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். 25 போட்டிகளில் 622 ரன்களை அடித்தார்.
-
Many many happy returns of the day @mandhana_smriti. 🎂
— BCCI Women (@BCCIWomen) July 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The World No. 1 WODI batter recently received her Arjuna Award. pic.twitter.com/SRCdgGppnb
">Many many happy returns of the day @mandhana_smriti. 🎂
— BCCI Women (@BCCIWomen) July 18, 2019
The World No. 1 WODI batter recently received her Arjuna Award. pic.twitter.com/SRCdgGppnbMany many happy returns of the day @mandhana_smriti. 🎂
— BCCI Women (@BCCIWomen) July 18, 2019
The World No. 1 WODI batter recently received her Arjuna Award. pic.twitter.com/SRCdgGppnb
இந்திய அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை தந்த மந்தானாவுக்கு, மத்திய அரசு கடந்த ஆண்டு விளையாட்டின் முக்கிய விருதான அர்ஜூனா விருதுக்கு தேர்ந்தெடுத்தது. அச்சமயத்தில் இவர் வெளிநாட்டில் இருந்ததால், இந்த விருதினை தனது பிறந்தநாளான நேற்று, விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூவிடம் பெற்றார். இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு மகத்தான சேவை அளித்துவரும் இவருக்கு பிசிசிஐ, இந்திய வீரர் ரஹானே உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.