மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் வரும் பிப்.21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் இன்றைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருந்தது.
ஆனால் இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே கடும் மழை பெய்ததால், ஆட்டம் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வரும் 18ஆம் தேதி நடக்கவுள்ள இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ளவுள்ளது.
முன்னதாக இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மேலும் மழையின் காரணமாக ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் - தாய்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈடிவி பாரத்திற்கு இந்தியாவின் உசைன் போல்ட் பிரத்யேக பேட்டி!