இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம் வருவபவர் யஸ்வேந்திர சஹால். இவர் சமீபத்தில் தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் இந்திய அணிக்காக தான் விளையாடுவது பற்றி மனம் திறந்துள்ளார்.
இது குறித்து பேசிய சஹால், "நானும் குல்தீப் யாதவும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள். நாங்கள் தொடக்கத்திலிருந்தே ஒன்றாக பந்து வீசுகிறோம். நாங்கள் ஒன்றாக விளையாடும்போது, பேட்ஸ்மேன்களை சமாளிக்க அதிக வேறுபாடுகள் உள்ளன.
நான் ஓரிரு நல்ல ஓவர்களை வீசினால், குல்தீப்பின் முடிவில் ஏதாவது நல்லது நடக்கும். மேலும் இந்திய அணியில் தற்போது ஜடேஜா, குல்தீப், நான் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளோம்.
ஒரு சில சமயங்களில் அணியில் ஒரே ஒரு அவர் பந்து வீச்சாளர் மட்டுமே இடம் பெறுவார். அச்சமயங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பும், நெருக்கடியும் அதிகமாகும் இருக்கும்.
மேலும் தற்போது வரை நான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் மட்டுமே இடம்பிடித்து வருகிறேன். ஆனால் என்னுடைய ஆசை அனைத்தும் இந்திய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் களம் இறங்க வேண்டும் என்பதுதான். ஏனெனில் அது எனக்கு ஒரு புதுவகையான அனுபவத்தை கொடுக்கும். மேலும் மட்டற்ற மகிழ்ச்சியையும் வழங்கும்" என்றார்.
இதையும் படிங்க: பென் ஸ்டோக்ஸ் தோனியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்ரீசாந்த்