ETV Bharat / sports

ஆஸி.,பந்துவீச்சாளர்களை பாராட்டிய வசீம் அக்ரம்!

இந்திய அணிக்கெதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோரை பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வசீம் அக்ரம் பாராட்டியுள்ளார்.

What a spell by the Australians, pace matters: Wasim Akram

author img

By

Published : Dec 19, 2020, 4:34 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்தியா:

ஜோஷ் ஹசில்வுட்
ஜோஷ் ஹசில்வுட்

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், புஜாரா, கேப்டன் கோலி, ரஹானே விஹாரி, சஹா, அஸ்வின் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 36 ரன்களுக்கு டிக்ளர் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையையும் இந்திய அணி படைத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட் 5 விக்கெட்களையும், பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா அபார வெற்றி

பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ்

பின்னர், 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கும் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

வசீம் அக்ரம் பாராட்டு:

  • Wait what happened? I just went to play 9 holes came back game over . What a spell by The Australians . Pace matters. #INDvsAUSTest

    — Wasim Akram (@wasimakramlive) December 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இப்போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வசீம் அக்ரம், என்ன நடந்தது? நான் பார்த்த போது 9 விக்கெட்டுகள் மீதமிருந்தன. தற்போது மீண்டும் பார்க்கும் போது ஆட்டம் முடிந்து விட்டது. ஆஸ்திரெலியர்கள் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் வேகம் இப்போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டிவுள்ளார்.

இதையும் படிங்க:கொலோன் உலகக் கோப்பை: இறுதிச்சுற்றில் சதீஷ் குமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.