இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த அணிகளுக்கு இடையிலான இராண்டாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கடந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த போட்டியில் மாற்றமின்றி அதே அணியுடன் களமிறங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்த வரையில் தடையிலிருந்து மீண்டுள்ள நிக்கோலஸ் பூரான் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்டினுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
-
Toss Update: West Indies win the toss and elect to bowl first.
— BCCI (@BCCI) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Score predictions? 🤔 #INDvWI | #TeamIndia pic.twitter.com/3TIPcAperi
">Toss Update: West Indies win the toss and elect to bowl first.
— BCCI (@BCCI) December 8, 2019
Score predictions? 🤔 #INDvWI | #TeamIndia pic.twitter.com/3TIPcAperiToss Update: West Indies win the toss and elect to bowl first.
— BCCI (@BCCI) December 8, 2019
Score predictions? 🤔 #INDvWI | #TeamIndia pic.twitter.com/3TIPcAperi
இந்திய அணி: விராட் கோலி (கே), ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், கே எல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே.
வெஸ்ட் இண்டீஸ் அணி: பொல்லார்ட் (கே), நிக்கோலஸ் பூரான், சிம்மன்ஸ், ஜேசன் ஹோல்டர், லூயிஸ், ஷெல்டன் காட்ரெல், சிம்ரான் ஹெட்மயர், பிராண்டன் கிங், வில்லியம்ஸ், கேரி பியர், ஹேய்டன் வால்ஷ்.
இதையும் படிங்க: சேவாக் அன்று அவுட்டாகாமல் இருந்திருந்தால்..!