வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவந்தது. இதில் பிப்ரவரி 14ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, டாக்காவில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 409 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டா சில்வா 92 ரன்களை எடுத்தார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 296 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ராகீம் கார்ன்வால் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி, பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்.
பின்னர் 113 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இஸ்லாம், நயீம் ஆகியோரது அபார பந்துவீச்சால் 117 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணி தரப்பில் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும், நயீம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் அதிரடியான தொடக்கத்தைத் தந்து, அரை சதம் கடந்தார். ஆனால், மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் வெற்றி வெஸ்ட் இண்டீஸ் அணி பக்கம் திரும்பியது.
இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன், அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இறுதி கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறுவதற்கு ஒரு விக்கெட்டும், வங்கதேச அணி வெற்றி பெறுவதற்கு 17 ரன்களும் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத்தொடங்கியது.
-
A memorable win for West Indies, and they sweep the series 2-0!
— ICC (@ICC) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
What a contest this was! #BANvWI scorecard: https://t.co/Es33PQRdna pic.twitter.com/kin67NJQ92
">A memorable win for West Indies, and they sweep the series 2-0!
— ICC (@ICC) February 14, 2021
What a contest this was! #BANvWI scorecard: https://t.co/Es33PQRdna pic.twitter.com/kin67NJQ92A memorable win for West Indies, and they sweep the series 2-0!
— ICC (@ICC) February 14, 2021
What a contest this was! #BANvWI scorecard: https://t.co/Es33PQRdna pic.twitter.com/kin67NJQ92
இறுதியில் வங்கதேச அணி 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையும் படிங்க: மூன்றாவது டெஸ்ட்: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!