கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது ஏராளமான போட்டிகளின் முடிவு கடைசி பந்தில்தான் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும். பெரும்பாலும், கடைசி பந்தில் வெற்றிக்கு நான்கு, ஐந்து, அல்லது ஆறு ரன்கள் தேவைப்பட்டால், பேட்டிங் செய்யும் வீரர்கள் சிக்சர் அடிக்கவே முயற்சிப்பார்கள். போட்டியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு தோன்றும்.
அதுவும் வெற்றிக்கு ஒரு பந்தில் ஐந்து ரன்கள் என்றால் சொல்லவே வேண்டாம் போட்டியை பார்க்கும் ரசிகர்களும் நுனி சீட்டில் நகத்தை கடித்துகொண்டு பார்ப்பார்கள்.இதுபோன்ற சூழ்நிலையில், பேட்டிங் செய்யும் பெரும்பாலான வீரர்கள் சிக்சர் அடிக்கவே முயற்சிப்பார்கள். இதில், சிலர் வெற்றிகண்டுள்ளனர். சிலர் தோல்வி அடைந்துள்ளனர்.
2017இல் நடைபெற்ற நிதாஸ் டிராபி தொடரில் கூட வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு பந்தில் ஐந்து ரன்கள் தேவை என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார்.
தற்போது தினேஷ் கார்த்திக்கை போலவே, ஆஸ்திரேலிய வீராங்கனை கோர்ட்னி வெப் எந்தவித பதற்றமுமின்றி தனது அதிரடியான பேட்டிங்கால் ஃபினிஷ் செய்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலான மகளிர் பிக் பாஷ் டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக டாஸ்மேனியாவைச் சேர்ந்த வீராங்கனை கோர்ட்னி வெப் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார்.
நேற்று சிட்னியில் நடைபெற்ற லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி, சிட்னி சிக்சர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது களத்திலிருந்த கோர்ட்னி வெப் சிக்சர் அடித்து அசத்தி வந்தார். இறுதியில், அந்த அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் ஐந்து ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை காப் வீசிய ஓவர் பிட்ச் பந்தை, கோர்ட்னி வெப் லாங் ஆன் திசையில் சிக்சர் அடித்து மேட்சை சிறப்பாக ஃபினிஷ் செய்தார். இதனால், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றி, நான்கு தோல்வி என 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
-
COURTNEY. WEBB.
— Rebel Women's Big Bash League (@WBBL) November 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
'Gades needed five to win, then she did THIS! 🔥@CommBank | #WBBL05 pic.twitter.com/lZH04ZJ40T
">COURTNEY. WEBB.
— Rebel Women's Big Bash League (@WBBL) November 17, 2019
'Gades needed five to win, then she did THIS! 🔥@CommBank | #WBBL05 pic.twitter.com/lZH04ZJ40TCOURTNEY. WEBB.
— Rebel Women's Big Bash League (@WBBL) November 17, 2019
'Gades needed five to win, then she did THIS! 🔥@CommBank | #WBBL05 pic.twitter.com/lZH04ZJ40T
மறுமுனையில், சிட்னி சிக்சர்ஸ் அணி விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றி, மூன்று தோல்வி என 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடைசி பந்தில் கோர்ட்னி வெப் சிக்சர் அடித்து மேட்சை ஃபினிஷ் செய்த வீடியோ சமூவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க:ஐந்து பந்தில் ஐந்து சிக்சர்... ஜஸ்ட் மிஸ்ஸான யுவி.யின் சாதனை!