இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 14ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
இப்போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டன் மொமினுல் ஹாக், எங்களுடைய அணி பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காததால் தான் நாங்கள் தோல்வியடைந்தோம். எங்கள் அணியில் முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் ஜொலித்தார்கள். ஆனால் நாங்கள் அணியாக செயல்பட மறந்துவிட்டோம். அதுவே எங்களது தோல்விக்கு முக்கிய காரணமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி 22ஆம் தேதி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 3 நாட்களில் டெஸ்ட் மேட்சை முடித்த இந்தியா!