கோவிட்-19 பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் தானாகவே முன்வந்து சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது குடும்பத்தினருடன் இணைந்து சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் இன்று தனது மகன் சோரவருடன் (Zoravar) இணைந்து பிரபல பாலிவுட் பாடலான ‘டாடி கூல்’ (Daddy Cool) பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ஷிகர் தவான் வெளியிட்ட இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்திக்கொள்ளுங்கள் - இலங்கை கிரிக்கெட் வாரியம்!