ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு, கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜடேஜாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கை பெருவிரலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். அத்துடன், அவர் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரவீந்திர ஜடேஜாவிற்கு ஓய்வளிக்கப்பட்டது. உடல்நலம் பெற்று மீண்டுவந்த ஜடேஜா, பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நேற்று மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
-
Back on the field 🏃🏻#firstday #postsurgery pic.twitter.com/SrCyLx7TQx
— Ravindrasinh jadeja (@imjadeja) March 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Back on the field 🏃🏻#firstday #postsurgery pic.twitter.com/SrCyLx7TQx
— Ravindrasinh jadeja (@imjadeja) March 2, 2021Back on the field 🏃🏻#firstday #postsurgery pic.twitter.com/SrCyLx7TQx
— Ravindrasinh jadeja (@imjadeja) March 2, 2021
தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தான் பயிற்சி பெறும் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா பகிர்ந்துள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை 51 டெஸ்ட், 168 ஒருநாள், 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 4,500க்கும் அதிகமான ரன்களையும், 450க்கும் அதிகமான விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க: 4ஆவது டெஸ்ட்: இங்கிலாந்தை அசால்ட் செய்யுமா இந்தியா?