ETV Bharat / sports

வாழ்வதற்கு மட்டும் வாழ்க்கையல்ல! பீருடன் ரிலாக்ஸ் செய்யும் இந்திய வீரர்! - மனோஷ் திவாரி ஐபிஎல் ரன்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, தான் ஐபிஎல் ஏலத்தில் ஒப்பந்தமாகாததை கையில் பீருடன் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Manoj Tiwary
Manoj Tiwary
author img

By

Published : Dec 23, 2019, 8:14 PM IST

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சில போட்டிகளில் மட்டுமே விளையாடி, பின் நாட்களில் அடையாளம் தெரியாத வீரர்களாக மாறியவர்கள் சிலர். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மனோஜ் திவாரி. இந்திய அணிக்காக 2008இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் அறிமுகமான இவர் இதுவரை 12 ஒருநாள் போட்டிகளிலும், மூன்று சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்திய அணியில் விளையாட போதுமான வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை என்றாலும் ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் டெல்லி, கொல்கத்தா, புனே, பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக என மொத்தம் 98 போட்டிகளில் விளையாடி 1,695 ரன்களை எடுத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 20ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் 13ஆவது சீசனுக்கான ஏலத்தில் மனோஜ் திவாரியின் பெயர் இடம்பெற்றிருந்து. அவரது அடிப்படைத் தொகை ரூ. 50 லட்சம் என இருந்தபோதிலும் அவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.

  • I dont tweet a lot,this is somewhat late since the auctions were a few days ago,but can't understand how players like @tiwarymanoj not be picked,these are guys who have given everything for the franchise they played for.other players who come to mind @s_badrinath & @pragyanojha

    — Kartik Murali (@kartikmurali) December 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மனோஜ் திவாரி ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முரளி கார்த்திக், "மனோஜ் போன்ற வீரர்களை ஏன் யாரும் தேர்வு செய்யவில்லை என்பது எனக்கு புரியவில்லை" என தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து, ஐபிஎல் ஏலத்தில், தான் ஒப்பந்தமாகாததை மனோஜ் திவாரி தனது கையில் பீருடன் கொண்டாடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், வாழ்வதற்கு மட்டும் வாழ்க்கையல்ல கொண்டாடுவதற்கும்தான் என குறிப்பிட்டிருந்தார்.

2012இல் சென்னைக்கு எதிரான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்து கொல்கத்தா அணியை சாம்பியன் பட்டம் பெறவைத்த இவர் இறுதியாக 2018இல் சென்னைக்கு எதிரான லீக் போட்டியில்தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மனோஜ் திவாரி, ஹர்பஜன் இடையே ட்விட்டரில் காரசார விவாதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.