இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் வாசிம் ஜாஃபர். சிலருக்கு சர்வதேச கிரிக்கெட்டை விடவும் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக ஆடுவார்கள். அதுபோன்ற கிரிக்கெட்டர்தான் வாசின் ஜாஃபர். 2008ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக இந்திய அணிக்காகக் களமிறங்கினார். அதையடுத்து அணியிலிருந்து நீக்கப்பட்ட வாசிம் ஜஃபர் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் பங்கேற்றார்.
1996-97ஆம் ஆண்டில் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் கால்பதித்த வாசிம் ஜாஃபர் இன்று வரை தொடர்ந்து ஆடிவருகிறார். சில நாள்களுக்கு முன்னதாக 150 ரஞ்சி டிராபி போட்டிகளில் ஆடிய முதல் கிரிக்கெட்டர் என்ற பெருமையை வாசிம் ஜாஃபர் பெற்றார்.
இவர் சில ஆண்டுகளாக விதர்பா அணிக்காக ரஞ்சி டிராபி தொடர்களில் பங்கேற்றுவருகிறார். இவரின் வருகையால் விதர்பா அணி தொடர்ந்து இரண்டு முறை ரஞ்சிக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
தற்போது விதர்பா அணிக்காக ஆடிவரும் வாசிம் ஜாஃபர் இன்று தொடங்கிய கேரள அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் எடுத்ததன் மூலம் ரஞ்சி டிராபி தொடர்களில் 12 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: கோலி அசால்ட்டாக 75 - 80 சதம் அடிப்பார் - வாசிம் ஜாஃபர் கணிப்பு