ETV Bharat / sports

மறைந்த தோழன் பிறந்தநாளன்று முச்சதம் அடித்த அஞ்சலி செலுத்திய வார்னர்! - பாகிஸ்தானுக்கு எதிராக வார்னர் அடித்த 335 ரன்கள்

மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் பிறந்தநாளான இன்று, வார்னர் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் முச்சதம் அடித்து அர்ப்பணித்தார்.

Warner
Warner
author img

By

Published : Nov 30, 2019, 10:08 PM IST

Updated : Dec 1, 2019, 12:21 PM IST

கிரிக்கெட் போட்டிகளில் பவுன்சர் பந்து தாக்கி உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்துள்ளது. ஆனால், 2014ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் தேதி அன்று பவுன்சர் பந்தால் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மரணம் ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் இவரது உயரிழப்பு ஏற்றுக்கொள்ள முடியாத வலியை தந்தது. அந்தவகையில், பிலிப் ஹியூஸின் நெருங்கிய நண்பராக இருந்தவர் டேவிட் வார்னர்.

Warner
வார்னர்

பிலிப் ஹியஸ் மறைந்ததையடுத்து, தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் பிலிப் ஹியூஸின் ரன்கள்தான் என வார்னர் உணர்ச்சி பொங்க தெரிவித்திருந்தார். அதேபோல், 2014இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது வார்னர் 63 ரன்கள் கடந்த போதெல்லாம், வானத்தை நோக்கி பிலிப் ஹியூஸை நினைவுகூர்ந்தார். பிலிப் ஹியூஸ் 63 ரன்களில் இருந்தபோது பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டதால், தான் வார்னர் ஒவ்வொரு முறையும் 63 ரன்கள் எடுக்கும்போதெல்லாம் அவர் நினைவாக இவ்வாறு நடந்துகொள்கிறார்.

Warner
வார்னர்

பிலிப் ஹியூஸ் மறைந்து ஐந்தாண்டுகள் கடந்த நிலையில், இன்று அவருக்கு 31ஆவது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் நினைவுகூரும் வார்னர், இம்முறை பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து பிலிப் ஹியூஸிற்கு அர்ப்பணித்துள்ளார். அடிலெய்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வார்னர் 418 பந்துகளில் 39 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 335 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.

இதையும் படிங்க: டான்... டான்... டானுக்கெல்லாம்... டான்... இந்த வார்னர் தான்!

Intro:Body:

Warner scores triple ton and gave tribute to phlip huges

Conclusion:
Last Updated : Dec 1, 2019, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.