சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் பத்தாண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரரை தேர்வுசெய்து விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2011-2020ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்குப் பரிந்துரைசெய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஐசிசி கடந்த மாதம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடவர் மற்றும் மகளிர் அணிகளை ஐசிசி நேற்று அறிவித்தது.
இதில் ஐசிசியின் கனவு டெஸ்ட் அணியின் கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பிடித்துள்ளார்.
-
Your ICC Men's Test Team of the Decade 🏏
— ICC (@ICC) December 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
A line-up that could probably bat for a week! 💥 #ICCAwards pic.twitter.com/Kds4fMUAEG
">Your ICC Men's Test Team of the Decade 🏏
— ICC (@ICC) December 27, 2020
A line-up that could probably bat for a week! 💥 #ICCAwards pic.twitter.com/Kds4fMUAEGYour ICC Men's Test Team of the Decade 🏏
— ICC (@ICC) December 27, 2020
A line-up that could probably bat for a week! 💥 #ICCAwards pic.twitter.com/Kds4fMUAEG
ஐசிசி கனவு டெஸ்ட் அணி: அலெஸ்டர் குக் (இங்கிலாந்து), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), விராட் கோலி (கே) (இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), குமார் சங்ககரா (இலங்கை), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ரவிச்சந்திரன் அஸ்வின் ( இந்தியா), டேல் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா), ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து).
அதேசமயம் ஐசிசியின் மகளிர் ஒருநாள் கனவு அணியில் இந்தியாவின் மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி ஆகியோரும், மகளிர் டி20 அணியில் ஹர்மன்பிரீத் கவுர், பூனம் யாதவ் ஆகியோரும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
-
The ICC Women's ODI Team of the Decade 👊
— ICC (@ICC) December 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇦🇺 🇦🇺 🇦🇺
🇮🇳 🇮🇳
🇿🇦 🇿🇦
🌴 🌴
🇳🇿
🏴 #ICCAwards pic.twitter.com/NxiF9dbnt9
">The ICC Women's ODI Team of the Decade 👊
— ICC (@ICC) December 27, 2020
🇦🇺 🇦🇺 🇦🇺
🇮🇳 🇮🇳
🇿🇦 🇿🇦
🌴 🌴
🇳🇿
🏴 #ICCAwards pic.twitter.com/NxiF9dbnt9The ICC Women's ODI Team of the Decade 👊
— ICC (@ICC) December 27, 2020
🇦🇺 🇦🇺 🇦🇺
🇮🇳 🇮🇳
🇿🇦 🇿🇦
🌴 🌴
🇳🇿
🏴 #ICCAwards pic.twitter.com/NxiF9dbnt9
ஐசிசி மகளிர் ஒருநாள் கனவு அணி: அலிஸா ஹீலி (ஆஸ்திரேலியா), சுசி பேட்ஸ் (நியூசிலாந்து), மிதாலி ராஜ் (இந்தியா), மெக் லானிங் (கே) (ஆஸ்திரேலியா), ஸ்டாஃபானி டெய்லர் (வெ.இண்டீஸ்), சாரா டெய்லர் (இங்கிலாந்து), எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா), டேன் வான் நீகெர்க் (தெ.ஆப்பிரிக்கா), மரிசேன் காப் (தெ.ஆப்பிரிக்கா), ஜூலன் கோஸ்வாமி (இந்தியா), அனிஷா முகமது (வெ.இண்டீஸ்).
-
The ICC Women's T20I Team of the Decade 🔥
— ICC (@ICC) December 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Plenty of runs and wickets in that side! 👏 #ICCAwards pic.twitter.com/mRkVN1SHSf
">The ICC Women's T20I Team of the Decade 🔥
— ICC (@ICC) December 27, 2020
Plenty of runs and wickets in that side! 👏 #ICCAwards pic.twitter.com/mRkVN1SHSfThe ICC Women's T20I Team of the Decade 🔥
— ICC (@ICC) December 27, 2020
Plenty of runs and wickets in that side! 👏 #ICCAwards pic.twitter.com/mRkVN1SHSf
ஐசிசி மகளிர் டி20 கனவு அணி: அலிஸா ஹீலி (ஆஸ்திரேலியா) , சோஃபி டெவின் (நியூசிலாந்து), சுசி பேட்ஸ் (நியூசிலாந்து), மெக் லான்னிங் (சி) (ஆஸ்திரேலியா), ஹர்மன்பிரீத் கவுர் (இந்தியா), ஸ்டாஃபானி டெய்லர் (வெ.இண்டீஸ்), தியாண்ட்ரா டோட்டின் (வெ.இண்டீஸ்), எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா), அன்யா ஷ்ருப்சோல் (இங்கிலாந்து), மேகன் ஷட் (ஆஸ்திரேலியா), பூனம் யாதவ் (இந்தியா).
இதையும் படிங்க:'ரஹானேவின் ஆட்டம் சிறப்பு' - ரிக்கி பாண்டிங்