ETV Bharat / sports

கரீபியன் மண்ணில் டெஸ்ட் மன்னரான கோலி! - Most test Wins by Indian Captain

2011ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி, 2016இல் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து, 2019இல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக கோலி ஆனதுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடர் உதவியுள்ளது.

Virat kohli
author img

By

Published : Sep 3, 2019, 11:16 PM IST

தற்போதைய கிரிக்கெட் உலகில் ரன் மெஷினாக திகழ்ந்துவரும் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் மூலம்தான் சிறந்த பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

2011 மோசமான அறிமுகம்

இளம் வயதிலேயே ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் கோலி 2008இல் இடம்பிடித்தார். ஆனால், கிரிக்கெட்டின் சிறந்த ஃபார்மெட்டான டெஸ்ட்டில் அவருக்கான இடம் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. 2011 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸுக்கு பயணப்பட்டது. அதன்மூலம், தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார், கோலி.

Kohli
2011 சொதப்பலான அறிமுகம்

ஜமைக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ஐந்தாவது வரிசையில்தான் களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் நான்கு, இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் டெஸ்ட் தொடர், அந்நிய மண் போன்ற சூழலில் அவரால் 76 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கோலியின் மறக்க முடியாத 2016 வெஸ்ட் இண்டீஸ் பயணம்

ஒருநாள் போட்டியை போல, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவருக்கு சொதப்பலான அறிமுகம்தான் கிடைத்து. எனினும் 2011க்கு பிறகு இந்திய அணி 2016இல்தான் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன் இடைப்பட்டக் காலத்தில் இந்திய டெஸ்ட் அணியிலும், கோலியின் ஃபார்மிலும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன.

Kohli
முதல் இரட்டை சதம்

2014 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு பேட்ஸ்மேனாக இருந்த கோலி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றார். இந்தத் தொடர்தான் கோலியின் பேட்டிங்கை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றது. அதற்கு அடிலெயிட்டில் நடைபெற்ற டெஸ்ட்தான் உதாரணம்.

Kohli
முதல் இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில் மைதானத்துக்கு முத்தமிட்ட கோலி

2011இல் சொதப்பிய அவர், இம்முறை எந்த அளவிற்கு விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்டஸ் மைதானமான ஆன்டிகுவாவில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில், சிறப்பாக பேட்டிங் செய்த கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். அதன்பின், மூன்று போட்டிகள் கொண்ட அந்தத் தொடரை கோலி தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. கோலியின் முதல் ஓவர்சீஸ் டெஸ்ட் தொடர் வெற்றியாகவும் அமைந்தது.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் கோலி:

2016க்கு பிறகு, கோலி அனைத்து விதமான ஃபார்மெட்களிலும் சிறப்பாக பேட்டிங் செய்துவருகிறார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் இந்திய அணியை அரையிறுதிவரை எடுத்துச் சென்றார். உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

Kohli
வெற்றிகரமான கேப்டன்

இம்முறை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இந்தத் தொடர் நடைபெற்றதால், இந்திய அணியின் ஆட்டத்தின் மீதும், கோலியின் கேப்டன்ஷிப் மீதும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே, பும்ரா ஆகியோரால் இந்திய அணி எளிதாக வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து, ஜமைக்காவில் நடைபெற்ற கடைசி போட்டியில் அனுமா விஹாரி, பும்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோரின் மேஜிக்கால் இந்திய அணி மீண்டும் வெற்றிபெற்று தொடரை வென்றது.

Kohli
வெற்றிபெற்ற கொண்டாட்டத்தில் இந்திய அணி

இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணியின் கேப்டன் என்ற தோனியின் சாதனையை முறியடித்தார். தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து 27இல்தான் வெற்றி பெற்றார். ஆனால், கோலியோ 48 போட்டிகளில் 28 வெற்றிகளை பதிவு செய்து அசத்தினார்.

Kohli
கோலி

அதேபோல, அந்நிய மண்ணில் அதிக வெற்றிகளை (13) பதிவு செய்த கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதன்மூலம், 2011ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி, 2016இல் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து, 2019இல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக கோலி ஆனதுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடர் உதவியுள்ளது. குறிப்பாக, ஜமைக்காவில் தொடங்கிய இவரது மோசமான தொடக்கம் மாறி அதே ஜமைக்கா இவரை சிறந்த கேப்டனாகவும் கண்டுள்ளது.

Intro:Body:

Virat kohli breaks Msdhoni TEST records

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.