இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலி, இஷான் கிஷான் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 17.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 49 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளை விளாசி 73 ரன்களை எடுத்தார். இப்போட்டியில் விராட் கோலி 73 ரன்களை அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
-
Who else could it have been?@imVkohli became the first player to score 3000 runs in men's T20Is last night 👏#INDvENG pic.twitter.com/iK87PmnCNF
— ICC (@ICC) March 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Who else could it have been?@imVkohli became the first player to score 3000 runs in men's T20Is last night 👏#INDvENG pic.twitter.com/iK87PmnCNF
— ICC (@ICC) March 15, 2021Who else could it have been?@imVkohli became the first player to score 3000 runs in men's T20Is last night 👏#INDvENG pic.twitter.com/iK87PmnCNF
— ICC (@ICC) March 15, 2021
இதுவரை, 86 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, சர்வதேச டி20 போட்டிகளில் ஆயிரம், இரண்டாயிரம் ரன்களை, முதல் வீரராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மெக்கல்லம் கடந்திருந்தார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 99 போட்டிகளில் 2 ஆயிரத்து 839 ரன்களுடனும், ரோகித் சர்மா 109 போட்டிகளில் 2 ஆயிரத்து 773 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஜிம்பாப்வேவிற்கு அதிர்ச்சி கொடுத்த ஆஃப்கானிஸ்தான்!