ETV Bharat / sports

400ஆவது போட்டியில் களமிறங்கிய கோலி; சோதனையில் முடிந்த சாதனை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி மூலம், 400 சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற எட்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் கோலி பெற்றுள்ளார்.

Virat Kohli
Virat Kohli
author img

By

Published : Dec 19, 2019, 4:17 AM IST

தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டின் ரன் மெஷின், சேஸ் மாஸ்டர் என ரசிகர்களால் அழைக்கப்படுவர் இந்திய அணியின் கேப்டன் கோலி. 2008இல் இலங்கை அணிக்கு எதிரான போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கோலி, தனது அதீத வளர்ச்சியால் இன்று பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.

இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இதனிடையே கோலி பங்கேற்ற 241 ஒருநாள் போட்டி இதுவாகும். இதன் மூலம், டெஸ்ட், ஒருநாள், டி20 என 400 சர்வதேச போட்டிகளில் விளையாடிய எட்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதேசமயம், 400 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 33ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆனால் இத்தகைய பெறுமைக்குறிய இப்போட்டியில் அவர் டக் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார்.

இதுவரை 241 ஒருநாள், 84 டெஸ்ட், 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 70 சதங்கள் அடங்கிய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் 664 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

400 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள்:

  1. சச்சின் - 664 போட்டிகள்
  2. தோனி - 538 போட்டிகள்
  3. ராகுல் டிராவிட் - 509 போட்டிகள்
  4. முகமது அசாருதீன் - 433 போட்டிகள்
  5. கங்குலி - 424 போட்டிகள்
  6. அனில் கும்ப்ளே - 403 போட்டிகள்
  7. யுவராஜ் சிங் - 402 போட்டிகள்
  8. கோலி - 400 போட்டிகள்

இதையும் படிங்க: இதுவே முதல்முறை...! இரண்டு கேப்டன்கள் செய்த மோசமான சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.