ETV Bharat / sports

பெண் குழந்தைக்குத் தந்தையானார் விராட் கோலி!

author img

By

Published : Jan 11, 2021, 4:38 PM IST

Updated : Jan 11, 2021, 6:48 PM IST

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி- நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

விராட் கோலி- நடிகை அனுஷ்கா சர்மா
விராட் கோலி- நடிகை அனுஷ்கா சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியினை விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியினை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரது அன்பு, பிரார்த்தனைகள், வாழ்த்துகள் ஆகியவற்றுக்கு நன்றி. அனுஷ்காவும், குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். எங்கள் வாழ்க்கையின் இந்தப் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதை ஆசிர்வாதமாக கருதுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர்களுக்கு கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறிவருகின்றனர்.

நீண்ட காலமாக காதலித்துவந்த விராட் கோலி- அனுஷ்கா சர்மா ஜோடி 2017ஆம் ஆண்டு இத்தாலியில் பிரமாண்டமாகத் திருமணம் செய்துகொண்டனர்.

இதையும் படிங்க: அனுஷ்கா சர்மாவின் யோகா மாஸ்டராக மாறிய கோலி!

Last Updated : Jan 11, 2021, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.