இந்திய அணியில் வீரர்களுக்கு நடத்தப்படும் உடற்தகுதி பரிசோதனை, யோ-யோ டெஸ்ட் ஆகியவற்றில் வருண் சக்ரவரத்தி தோல்வி அடைந்ததால், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் 'லெக் ஸ்பின்னர்' ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாகப் பந்துவீசியதை அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு வருண் சக்ரவர்த்தி தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், தோள்பட்டை காயம் காரணமாக அவரால் அத்தொடரில் பங்கேற்க முடியவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு வருண் சக்ரவர்த்தி தேர்வுசெய்யப்பட்டிருந்தார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதமியில் வீரர்கள் தகுதித்தேர்வான யோ-யோ சோதனை நடைபெற்றது. இத்தேர்வில் வருண் சக்ரவர்த்தில் குறிப்பிட்ட நேரத்தில் 2 கிலோ மீட்டர் இலக்கை எட்டவில்லை. அதேசமயம் அவருக்கு அளிக்கப்பட்ட மறுவாய்ப்பிலும் அவரால் இலக்கை எட்ட முடியவில்லை.
இதனையடுத்து, இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் வருண் சக்கரவர்த்தி இரண்டாவது முறையாக இந்திய அணிக்குள் நுழையும் வாய்ப்பைத் தவறவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இர்ஃபான், கோனி அதிரடி வீண்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி!