இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 போட்டி தொடரான சயீத் முஷ்டாக் அலி தொடர் தற்போது பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி, உத்தரப் பிரதேச அணியை இன்று எதிர்கொண்டது.
முதலில் டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 2 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். மறுமுனையில் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய், தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து அதிரடியாக ஆடினார்.
-
Fifties from M Vijay (51) and Dinesh Karthik (61) and a quickfire 14-ball 28 from Vijay Shankar helped TN post 168/7 on the board
— TNCA (@TNCACricket) November 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Moshin Khan, Ankit Rajpoot & Kuldeep Yadav scalped 2 wickets each for Uttar Pradesh
SCORES➡️ https://t.co/7s8lUI1isg#SyedMushtaqAliTrophy #TNvUP pic.twitter.com/lyFN5JVgfC
">Fifties from M Vijay (51) and Dinesh Karthik (61) and a quickfire 14-ball 28 from Vijay Shankar helped TN post 168/7 on the board
— TNCA (@TNCACricket) November 11, 2019
Moshin Khan, Ankit Rajpoot & Kuldeep Yadav scalped 2 wickets each for Uttar Pradesh
SCORES➡️ https://t.co/7s8lUI1isg#SyedMushtaqAliTrophy #TNvUP pic.twitter.com/lyFN5JVgfCFifties from M Vijay (51) and Dinesh Karthik (61) and a quickfire 14-ball 28 from Vijay Shankar helped TN post 168/7 on the board
— TNCA (@TNCACricket) November 11, 2019
Moshin Khan, Ankit Rajpoot & Kuldeep Yadav scalped 2 wickets each for Uttar Pradesh
SCORES➡️ https://t.co/7s8lUI1isg#SyedMushtaqAliTrophy #TNvUP pic.twitter.com/lyFN5JVgfC
இதில், அதிரடியாக விளையாடிய முரளி விஜய், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். முரளி விஜய் 51 ரன்களில் வெளியேற, தினேஷ் கார்த்திக்கும் 61 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பின் களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே எடுத்தது. உத்தரப் பிரதேச அணி சார்பில் குல்தீப் யாதவ், ராஜ்புட், மொஹ்சின் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய உத்தரப் பிரதேச அணியின் விக்கெட் கீப்பர் உபேந்திர யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார். சிறப்பாக விளையாடிய அவர் 41 பந்துகளில் 71 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.
-
Upendra Yadav (70* from 41B) finishes the game with a maximum as Uttar Pradesh beat TN with one ball to spare. #SyedMushtaqAliTrophy #TNvUP pic.twitter.com/0pBSWDV3fb
— TNCA (@TNCACricket) November 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Upendra Yadav (70* from 41B) finishes the game with a maximum as Uttar Pradesh beat TN with one ball to spare. #SyedMushtaqAliTrophy #TNvUP pic.twitter.com/0pBSWDV3fb
— TNCA (@TNCACricket) November 11, 2019Upendra Yadav (70* from 41B) finishes the game with a maximum as Uttar Pradesh beat TN with one ball to spare. #SyedMushtaqAliTrophy #TNvUP pic.twitter.com/0pBSWDV3fb
— TNCA (@TNCACricket) November 11, 2019
இவரின் அதிரடியால், உத்தரப் பிரதேச அணி 19.5 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்து, ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தமிழ்நாடு அணி சார்பில் பெரியசுவாமி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையும் படிங்க: ஃபீல்டிங்கில் சூப்பர்மேனாக மாறிய யூசஃப் பதான்