ETV Bharat / sports

தோனியின் ஓய்வு முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரெட் லீ! - ஐபிஎல் 2020

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'Upmost respect': Brett Lee congratulates Dhoni on 'outstanding career'

author img

By

Published : Aug 17, 2020, 7:11 PM IST

இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகர சாதனையாளனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி, கடந்த சனிக்கிழமை (ஆக.15) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தனது ட்விட்டர் பதிவில், ’உங்களுடைய சிறந்த கிரிக்கெட்டிற்கு வாழ்த்துகள் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட் களத்தில் நமது போர் தொடரும். ஆனால் உங்கள் ஆட்டத்திறனை மிகவும் மதிக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தோனி, வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் இந்த வீரர்கள் பங்கேற்க முடியாது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.