2020ஆம் ஆண்டுக்கான யு-19 உலகக்கோப்பைத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இதன் லீக் போட்டிகள் முடிவடைந்து, காலிறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளது. இதன் நாளைய போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆடவுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் டிபெண்டிங் சாம்பியன் பட்டத்திற்கு ஏற்ப சிறப்பாக ஆடிவருகிறது. லீக் போட்டிகளில் நியூசிலாந்து, ஜப்பான், இலங்கை ஆகிய அணிகளை எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஜெய்ஷ்வால், திவ்யன்ஷ் சக்சேனா, கேப்டன் ப்ரியன் கார்க் என டாப் ஆர்ட்ர் வலிமையாக உள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரவி பிஷ்னோய், கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங், அதர்வா ஆகியோர் மிரட்டலாக செயல்படுகின்றனர்.
மறைந்தார் 'பிளாக் மாம்பா' - கண்ணீரில் ரசிகர்கள்!
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்தாலும், நைஜீரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியில் இதுவரை தங்களின் திறமைகளை வீரர்கள் வெளிப்படுத்தாததால், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜசிசி விதிமுறைப்படி மாற்றுவீரர்கள் - ஐபிஎல் 2020இன் சர்ப்ரைஸ்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள நாளைய போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.