பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது சீசன் இன்று தொடங்கவுள்ளது. தொடரின் முதல் சீசனில் நடப்பு சாம்பியன் குவேட்டா கிலாடியேட்டர்ஸ் - இஸ்லமாபாத் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன. இகில் உமர் அக்மல், குவேட்டா கிலாடியேட்டர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார்.
இந்நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறி நடந்துகொண்டதால் அவரை பாகிஸ்தான் கிரக்கெட் வாரியம் உடனடியாக இடைநீக்கம் செய்து, எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்கக் கூடாது எனவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. இதனால், குவேட்டா கிலாடியேட்டர்ஸ் அணி உமர் அக்மலுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய பிசிபி அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், அவரிடம் விசாரனை நடைபெற்றுவருவதால், இந்த விவகாரம் குறித்து மேலும் எதுவும் தெரிவிக்க முடியாது எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் உடல்தகுதித் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில், டிரெய்னரிடம் ஒழுங்கினமான செயலில் ஈடுபட்ட பின் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணிக்காக, அமர் அக்மல் இறுதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியிருந்தார். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை உமர் அக்மல் 16 டெஸ்ட், 121 ஒருநாள், 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதையும் படிங்க: பிஎஸ்எல் தொடரில் களமிறங்கும் டேல் ஸ்டெயின்!