ETV Bharat / sports

டிஎன்பிஎல்: அலெக்சாண்டர் சுழலில் திணறிய திருச்சி ரூபி வாரியர்ஸ்! - RTV

திருநெல்வேலி: ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீழ்த்தியது.

Trichy Ruby Warriors tied to Alexander spin
author img

By

Published : Jul 24, 2019, 11:06 AM IST

டிஎன்பிஎல் டி20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற திருச்சி அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

அதைத்தொடர்ந்து விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஹாரிஷ் அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் ஆடிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி, அலெக்சாண்டரின் சுழலில் சிக்கித் திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திருச்சி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை மட்டுமே எடுத்தது.

ஐந்து விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் அலெக்சாண்டர்

சிறப்பாக பந்து வீசிய அலெக்சாண்டர் 4 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் ரூபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற அலெக்சாண்டர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Intro:Body:

TNPL - Trichy vs chennai result

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.