ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் லீக்கின் 20ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் மாலன் தலைமையிலான கலந்தர்ஸ் (Qalandars) அணி, ஹாசிம் ஆம்லா தலைமையிலான கர்நாடக டஸ்கர்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற கலந்தர்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் டேவிட் மாலன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அதன்பின் தனது ஆக்ரோஷ ஆட்டத்தினால் எதிரணியின் பந்து வீச்சாளர்களை சோதித்த பான்டன் டி10 லீக் வரலாற்றில் 17 பந்துகளில் அரை சதமடித்து புதிய சாதனையைப் படைத்தார்.
-
Fastest Fifty in Season 3!!!#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #qalandars #karnatakatuskers pic.twitter.com/j40dIGNDS7
— T10 League (@T10League) November 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Fastest Fifty in Season 3!!!#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #qalandars #karnatakatuskers pic.twitter.com/j40dIGNDS7
— T10 League (@T10League) November 21, 2019Fastest Fifty in Season 3!!!#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #qalandars #karnatakatuskers pic.twitter.com/j40dIGNDS7
— T10 League (@T10League) November 21, 2019
தொடர்ந்து தனது ருத்ர தாண்டவத்தை வெளிப்படுத்திய பான்டன் 28 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 80 ரன்களை விளாசி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் சோபிக்காததால் கலந்தர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை எடுத்தது.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டஸ்கர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக எவின் லூவிஸ் முதல் பந்தில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் டஸ்கர்ஸ் அணி 10 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை மட்டுமே எடுத்தது.
-
Qalandars won the game by 32 Runs!#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #qalandars #karnatakatuskers pic.twitter.com/PR6hxo9Hi2
— T10 League (@T10League) November 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Qalandars won the game by 32 Runs!#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #qalandars #karnatakatuskers pic.twitter.com/PR6hxo9Hi2
— T10 League (@T10League) November 21, 2019Qalandars won the game by 32 Runs!#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #qalandars #karnatakatuskers pic.twitter.com/PR6hxo9Hi2
— T10 League (@T10League) November 21, 2019
இதன் மூலம் கலந்தர்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா டஸ்கர்ஸ் அணியை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய அணியை வெற்றி பெறச் செய்த டாம் பான்டன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 9 சிக்சர்கள்... 33 பந்துகளில் 89 ரன்கள்... மீண்டும் பேட்டிங்கில் தெறிக்கவிட்ட கிறிஸ் லின்!