ETV Bharat / sports

விளையாட்டுப் போட்டிகளில் கரோனா வைரஸால் ஏற்பட்ட தாக்கங்களின் தொகுப்பு! - Effects of Coronavirus on sports

கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் எந்தந்த விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய முழுமையான தொகுப்பு.

Timeline: How coronavirus brought worldwide sport to standstill

author img

By

Published : Mar 15, 2020, 6:45 PM IST

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவது தற்போது வரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகாமன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தொற்றிலிருந்து 76 ஆயிரம் மக்கள் மீண்டுள்ள நிலையில், இதுவரை 5500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவலளித்துள்ளது.

இந்த வைரஸ் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வேகமாக பரவும் என உலக சுகாதார அமைப்பு கூறிய நிலையில், பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் தேதி மாற்றம், ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட விளையாட்டுகள்:

  • ஜனவரி 30: சீனாவில் நடைபெறவிருந்த அனைத்து உள்ளூர் கால்பந்து போட்டிகளையும் சீன கால்பந்து கூட்டமைப்பு ஒத்திவைத்தது.
  • பிப்ரவரி 25: ஜப்பானில் நடைபெறவிருந்த உள்ளூர் போட்டிகள் ஒத்திவைப்பு.
  • பிப்ரவரி 26: அயர்லாந்து - இத்தாலி அணிகளுக்கு இடையிலான ஆறுநாடுகள் பங்கேற்கும் லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
  • மார்ச் 5: இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் போது, கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வீரர்கள் கைக்குலுக்குவதை தடைசெய்தது.
    பிரீமியர் லீக் கால்பந்து தொடர்
    பிரீமியர் லீக் கால்பந்து தொடர்
  • மார்ச் 9: இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டது, இத்தாலியில் நடைபெறவிருந்த அனைத்து விளையாட்டுப்போட்டிகலும் ஒத்திவைக்கப்பட்டது.
  • மார்ச் 10: நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணியின் உரிமையாளர் எவாஞ்சலோஸ் மரினாகிஸ்(Evangelos Marinakis) தான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவலளித்தார். இதனையடுத்து மன்செஸ்டர் சிட்டி -அர்செனல் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
  • மார்ச் 12: அர்செனல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக்கல் ஆர்டெட்டாவிற்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருபது உறுதி செய்யப்பட்டது. மேலும், ஜுவெண்டஸ் அணியின் டிஃபெண்டர் டேனியல் ருகனிவும் கரோனா வைரஸால் பதிப்படைந்துள்ளது உறுதிசெய்யப்பட்டது.
  • மார்ச் 12: ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
    ஃபார்மூலா 1 கார்பந்தையம்
    ஃபார்மூலா 1 கார்பந்தையம்
  • மார்ச்12: ஸ்பெய்னின் பரம்பரிய கால்பந்து தொடரான லாலிகா தொடரின் இரண்டு சுற்றுகளுக்கான ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
  • மார்ச் 13: ஐரோப்பா கால்பந்து கூட்டமைப்பு, சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர்களை ஒத்திவைத்தது.
  • மார்ச் 13: பிரஞ்ச் கால்பந்து விளையாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அனைத்து லீக் 1 மற்றும் லீக் 2 கால்பந்து போட்டிகளை ஒத்திவைத்தது.
  • மார்ச் 13: ஃபார்மூலா 1 கார்பந்தயத்தின் பஹ்ரைன், வியட்நாம் கிராண்ட் பிரிக்ஸ் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன.
  • மார்ச் 13: ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த லண்டன் மாரத்தான் போட்டிகள் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தாண்டு அக்டோபர் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
    கோப்பு காட்சி
  • மார்ச் 13: இங்கிலீஷ் பிரீமியர் லீக், இங்கிலீஷ் கால்பந்து லீக், மகளிர் சூப்பர் லீக், மகளிர் சாம்பியன்ஷிப் ஆகியவை கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
  • மார்ச் 13: கரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
  • மார்ச் 13: மார்ச் 29ஆம் தேதி இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வருகிற ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது.
  • மார்ச் 13: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
    இந்தியா - தென் ஆப்பிரிக்கா
    இந்தியா - தென் ஆப்பிரிக்கா
  • மார்ச் 14: திட்டமிட்ட படி டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுமென ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.
  • மார்ச் 14: கரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
  • மார்ச் 14: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்து அனைந்து விதமான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
  • மார்ச் 15: கரோனா வைரஸ் காரணமாக இறுதிச்சுற்று ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
    கோப்பு காட்சி
  • மார்ச் 17: யூரோ 2020 கால்பந்து தொடரை ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பது குறித்து விவாதிக்க, வருகிற மார்ச் 17ஆம் தேதி ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிங்க:ஹாப்பி பெர்த்டே டூ டெஸ்ட் கிரிக்கெட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.